பிரித்தானிய பொதுத்தேர்தல்: களம் காணும் இலங்கை இந்திய வம்சாவளி வேட்பாளர்கள்
பிரித்தானிய பொதுத்தேர்தலில் இம்முறை இதுவரை இல்லாத அளவில் இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். களம் காணும் இலங்கை, இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் யார் யார் என பார்க்கலாம்.
கவனம் ஈர்த்துவரும் இலங்கைத் தமிழ் பின்னணி கொண்ட பெண்
லேபர் கட்சி சார்பில் Stratford and Bow தொகுதியில் போட்டியிடுகிறார் இலங்கைத் தமிழ்ப் பின்னணி கொண்டவரான உமா குமரன்.
இந்திய வம்சாவளி வேட்பாளர்கள்
பிரித்தானிய பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவளி வாக்காளர்களை கவர்வதற்காக இம்முறை இதுவரை இல்லாத அளவில் இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் சிலரைக் குறித்து இங்கு காணலாம்.
ஷைலேஷ் வாரா, பிரித்தி படேல், ரிஷி சுனக், ககன் மொகிந்திரா. கிளாரி கவுடின்ஹோ ஆகியோர் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இவர்கள் அனைவரும் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
புதிய வேட்பாளர்களான ஷிவானி ராஜா மற்றும் அமீத் ஜோகியா, கென்யா-குஜராத்தி முஸ்லீம் கவுன்சிலரான அப்பாஸ் மெராலி, இவர் லேபர் பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த கரேத் தாமஸை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.
On Thursday 30th May, Parliament will be dissolved until the General Election. I will be standing for re-election as Labour MP for Birmingham Edgbaston.
— Preet Kaur Gill (@PreetKGillMP) May 29, 2024
Promoted by AJ Webb on behalf of PK Gill both at 14-16 Bristol Street, B5 7AF. pic.twitter.com/rJFCGtQoKq
லேபர் கட்சி சார்பில் நவேந்து மிஷ்ரா, முதல் சீக்கிய பெண் நாடாளுமன்ற உறுப்பினரான பிரீத் கௌர் கில், சீக்கிய தலைப்பாகை அணிந்த முதல் நாடாளுமன்ற உறுப்பினரான தன்மஞ்சீத் சிங் தேசாய், லிசா நந்தி, சீமா மல்ஹோத்ரா, வாலெரி லாஸ், குறிப்பாக தனது முன்னாள் தலைவரான ஜெரமி கார்பினை எதிர்த்து போட்டியிடும் ப்ரஃபுல் நார்குந்த் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
It’s an honour to have been chosen as Labour’s candidate for Islington North and I look forward to the campaign ahead. I promise to be a truly local MP, that represents all families and businesses that call this special place their home.
— Praful Nargund (@prafulnargund) May 24, 2024
Only Labour can change the country and… https://t.co/FBXnXwMysL
இப்படி சொல்லிக்கொண்டே போகும் அளவில் இம்முறை ஏராளமான இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். யார் யார் மக்களால் தேர்ந்தெடுக்கப்படப்போகிறார்கள் என்பது விரைவில் தெரிந்துவிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |