பிரித்தானியாவில் வாக்களிப்பு துவங்கியது: வெற்றி பெற்றது யார் என எப்போது அறிந்துகொள்ளலாம்?
பிரித்தானியாவில், உள்ளூர் நேரப்படி காலை 7.00 மணிக்கு வாக்களிப்பு துவங்கியுள்ளது.
வெற்றி பெற்றது யார் என எப்போது அறிந்துகொள்ளலாம்?
பிரித்தானியாவில், உள்ளூர் நேரப்படி 7.00 மணிக்கு வாக்களிப்பு துவங்கியுள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள போராட, லேபர் கட்சி நீண்ட காலத்துக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றும் கனவில் இருக்கிறது.
இந்நிலையில், கடந்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், தேர்தலில் வெற்றி பெற்றது யார் என எப்போது அறிந்துகொள்ளலாம் என்பது முதலான சில விடயங்களைப் பார்க்கலாம்.
இரவு 10.00 மணி
இரவு 10.00 மணிக்கு வாக்களிப்பு முடிவுக்கு வந்துவிடும். தேர்தலில் வாக்களித்துவிட்டு வரும் வாக்காளர்களிடம், யார் வெற்றி பெறுவார் என்பது தொடர்பில் நடத்தப்படும் கருத்துக்கணிப்புகளின் முடிவும் வெளியாகும். பொதுவாக, அந்த கருத்துக்கணிப்புகள் சரியாகவே இருக்கும். 2019இல், போரிஸ் ஜான்சன் பிரதமராவார் என மக்கள் கூறியிருந்தார்கள், அதுபோலவே, தேர்தல் முடிவுகளும் அமைந்திருந்தன.
இரவு 11.00 மணி
இரவு 11.00 மணியளவில், வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களை வந்தடையத் துவங்கும். வாக்கு எண்ணிக்கை துவங்கும்.
??The UK is voting in a general election on Thursday, with opinion polls suggesting Labour will enter government for the first time in 14 years.
— euronews (@euronews) July 2, 2024
How does the election work, and what could the result mean for Europe?
A quick guide from our reporter @MaredGwyn?#UKElection pic.twitter.com/xZEljXVFHl
இரவு 11.30 முதல் 12.15 மணி வரை
யார் முதலில் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிப்பது என்னும் போட்டி துவங்கும். கடந்தமுறை, Newcastle upon Tyne Central தொகுதியின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் முதலில், அதாவது, 11.27 மணிக்கு வெளியாகின, 2017இலும் இந்த தொகுதியில்தான் முதன்முதலில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகின.
அதிகாலை 12.30 முதல் 3.00 மணி வரை
சுமார் 80 சதவிகித வாக்கு எண்ணிக்கை முடிந்து, முடிவுகள் வெளியாகத் துவங்கியிருக்கும்.
3.00 மணிக்கு மேல், எந்தக் கட்சி எத்தனை இடங்களைக் கைப்பற்றியது, எத்தனை இடங்களை இழந்தது என அனைத்து விவரங்களும் வெளியாகத்துவங்கும். பிரித்தானியர்கள் அனைவரும், எந்தக் கட்சி வெற்றிபெறும், யார் பிரதமராவார் என்பதை அறிந்துகொள்ள ஆவலாக இருக்கும் நிலையில், லேபர் கட்சி பெரும்பாலான இருக்கைகளைக் கைப்பற்றும் என்றும், கன்சர்வேட்டிவ் கட்சிக்கு பெரிய இழப்பு ஏற்படும் என்றும் சமீபத்திய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |