உக்ரைனுக்கு டாங்கிகளை அனுப்ப மாட்டோம்! பிரித்தானியா, ஜேர்மனி கூட்டாக அறிவிப்பு
ரஷ்ய படையெடுப்பை எதிர்த்து போராடி வரும் உக்ரைனுக்கு ராணுவ டாங்கிளை அனுப்பப்மாட்டோம் என பிரித்தானிாய, ஜேர்மனி நாடுகள் அறிவித்துள்ளன.
உக்ரைன் மீது தொடர்ந்து 45வது நாளாக போர் தொடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டில் பொதுமக்களை படுகொலை செய்து போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அதேசமயம், ரஷ்யா தாக்குதலிருந்து உக்ரைனை பாதுகாக்க தங்களுக்கு ஆயுதங்களை வழங்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, மேற்கத்திய நாடுகளுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்.
ஜெலன்ஸ்கி கோரிக்கை ஏற்று, சில நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கியுள்ளது.
இந்நிலையில், உக்ரைனுக்கு ராணுவ டாங்கிளை அனுப்பப்மாட்டோம் என பிரித்தானிாய, ஜேர்மனி நாடுகள் அறிவித்துள்ளன.
பிரபல ஐரோப்பிய நாட்டிற்கு பதிலடி கொடுத்த ரஷ்யா!
ஏப்ரல் 8ம் திகதி ஜேர்மன் அதிபர் Olaf Scholz உடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைனின் ஆயுத கோரிக்கைகள் அனைத்தையும் மேற்கத்திய நாடுகள் நிறைவேற்றியே ஆக வேண்டும் என்பது ஏற்புடையதாக இருக்காது இல்லை என கூறினார்.
மேலும், டாங்கிகளுக்கு பதிலாக 100 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள ராணுவ பாதுகாப்பு உபகரணங்களை உக்ரைனுக்கு பிரித்தானியா அனுப்பும்.
இதில், ஸ்டார்ஸ்ட்ரீக் விமான தடுப்பு ஏவுகணைகள் மற்றும் 800 டாங்கி தடுப்பு ஏவுகணைகள் அடங்கும் என போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.