பிரித்தானியாவில் 10 வயது சிறுமி மர்ம மரணம்: தொடங்கியது பொலிஸாரின் கொலை விசாரணை
பிரித்தானியாவில் சர்ரே-வில் 10 வயது சிறுமி உயிரிழந்துள்ள நிலையில் பொலிஸார் கொலை விசாரணையை தொடங்கியுள்ளனர்.
10 வயது சிறுமி மரணம்
பிரித்தானியாவின் சர்ரே(Surrey) பகுதியில் உள்ள சொத்து ஒன்றில் 10 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் கொலை விசாரணையை தொடங்கியுள்ளனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக வியாழக்கிழமை ஹம்மொண்ட் சாலையில்(Hammond Road) உள்ள முகவரிக்கு பொலிஸார் முன்னதாக அழைக்கப்பட்டுள்ளனர்.
10 வயது சிறுமியின் உயிரிழப்பு தொடர்பாக அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டு இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர், மேலும் அவர்களுக்கு சிறப்பு பயிற்சி பெற்ற அதிகாரிகள் ஆறுதல் வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
கொலை விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக நாங்கள் பேச விரும்பும் பல நபர்களை அடையாளம் கண்டறிந்துள்ளோம். ஆனால் இந்த நேரத்தில் கொலை விசாரணையில் தொடர்புடைய எந்த நபரையும் நாங்கள் அடையாளம் காணவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அதே சமயம் பொதுமக்கள் பயப்படும் அளவிற்கு எத்தகைய சூழ்நிலையும் இங்கு இல்லை என்று நம்புவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முத்த விசாரணை அதிகாரி மற்றும் தலைமை காவலர் டெபி வைட், இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்பதை பற்றிய தோற்றத்தை உருவாக்க அதிகாரிகள் முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |