பிரித்தானிய சுற்றுலா தளத்தில் உயிரிழந்த 11 வயது சிறுமி! பொலிஸார் வழங்கிய முக்கிய தகவல்
பிரித்தானியாவில் உள்ள சுற்றுலா தலத்தில் 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தண்ணீரில் விழுந்த சிறுமி கார்ன்வால் பகுதியில் அந்தோனி கிராமத்திற்கு அருகிலுள்ள அழகிய சுற்றுலா தலமான வாக்கர் குவேயில் 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை மாலை 6 மணியளவில் லின்ஹூர் ஆற்றின் வாக்கர் குவே பகுதியில் சிறுமி ஒருவர் விழுந்து விட்டதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர சேவை பிரிவினர் உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருப்பினும் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, இதில் சந்தேகத்திற்கு இடமில்லை என டேவன் மற்றும் கார்ன்வால் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கு முறையான ஆறுதல் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |