கனேடிய பெண் துயர மரணம்..கொந்தளிப்பை ஏற்படுத்திய பிரித்தானிய பெண்ணின் வீடியோ
அவுஸ்திரேலியாவில் கனேடிய பெண்ணொருவர் உயிரிழந்த நிலையில், பிரித்தானிய பெண்ணின் டிக்டோக் வீடியோ கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனேடிய பெண் மரணம்
கனடாவைச் சேர்ந்த பைப்பர் ஜேம்ஸ் என்கிற 19 வயது பெண், அவுஸ்திரேலியாவின் K'gari என்ற இடத்தில் உள்ள கடற்கரையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் காட்டு நாய்களால் கொல்லப்பட்டாரா என்ற கேள்வி எழுந்தது.
உடற்கூறு ஆய்வில் அவரது உடலில், அவர் உயிரிழப்பதற்கு முன்பும், அவர் உயிரிழந்த பின்பும் காயங்கள் ஏற்பட்டது தெரிய வந்தது. ஆனால், அப்பெண் காட்டு நாய்கள் அவரைத் தாக்கியதால் அவர் உயிரிழக்கவில்லை என்பது உறுதியானது.
இந்த நிலையில், பைப்பர் ஜேம்ஸின் மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, அதே தீவில் பிரித்தானிய சுற்றுலாப் பயணி எடுத்த வீடியோ பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் குறித்த சுற்றுலாப் பயணி மில்லி மெக்கார்த்தி, அந்தத் தீவில் வாழும் காட்டு நாய்கள் குறித்த தெளிவான பாதுகாப்பு எச்சரிக்கைகளை அப்பட்டமாகப் புறக்கணித்ததாக பார்வையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
டிக்டொக் வீடியோ
மில்லி மெக்கார்த்தியின் டிக்டொக் வீடியோவில், புதர்கள் நிறைந்த பகுதியில் தனியாக சுற்றித் திரிவதையும், அவர் காட்டு நாய்கள் எச்சரிக்கை பலகையை கடந்து செல்வதையும் பார்க்க முடிகிறது.

மேலும் அவர், 'டிங்கோ குச்சி' என்று அழைக்கப்படும் பாதுகாப்பு தடியை எடுத்துச் செல்வதா வேண்டாமா என்று அவர் வெளிப்படையாக விவாதிக்கிறார். இறுதியில் அவர் அதனை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்கிறார்.
அத்துடன் "இது மிகவும் பயமாக இருக்கிறது, ஏனென்றால் நான் இப்போது தனியாக முகாமை விட்டு வெளியேறப் போகிறேன்" என்று அவர் கமெராவில் கூறுகிறார்.
அடுத்த கிளிப்பில், அவர் எவ்வித பாதிப்பும் இல்லாமல் கடற்கரையை அடைவது காட்டப்படுகிறது.
இந்த டிக்டோக் வீடியோவை பார்த்தவர்கள் கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். அதற்கு பதிலளித்த மில்லி, விதிகளை மீறுவது என்பது தற்செயலாக நடந்ததாகவும், வேண்டுமென்றே எதையும் செய்யவில்லை கூறினார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |