மெட்டாவெர்ஸ் விர்ச்சுவல் முறையில் சீண்டலுக்கு உள்ளான பிரித்தானிய சிறுமி: பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
மெட்டாவெர்ஸ் விர்ச்சுவல் முறையில் சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் சீண்டலுக்கு உள்ளாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெட்டாவெர்ஸ் விர்ச்சுவல் சீண்டல்
பிரித்தானியாவை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் மெட்டாவெர்ஸ் விர்ச்சுவல் முறையில் வி ஆர் ஹெட்செட் அணிந்து கேம் விளையாடி கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அவரது டிஜிட்டல் அவதாரை யாரென்று தெரியாத சிலர் கூட்டு பாலியல் சிண்டல் செய்துள்ளனர்.
இதில் சிறுமிக்கு உடல் ரீதியான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், சிறுமிக்கு உளவியல் ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் பதிவாகியுள்ள முதல் விர்ச்சுவல் குற்றச்சாட்டு வழக்கு என்று இதுவாகும், எனவே இதனை விசாரிப்பதில் சிக்கல் இருப்பதாகவும், இதனால் இந்த வழக்கு தள்ளுபடியாக நிறைய வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
பர்சனல் பவுண்டரி
இருப்பினும், இந்த வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என பிரித்தானிய அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சீண்டலுக்கு உள்ளான சிறுமி விளையாடி விர்ச்சுவல் கேம் எது என்ற தகவல் வெளியாகவில்லை.
இத்தகைய விர்ச்சுவல் தளங்களை பயன்படுத்தும் பயனர்கள் “பர்சனல் பவுண்டரி என்ற ஆட்டோமேட்டிக் பாதுகாப்பு அம்சத்தை பயன்படுத்தி தங்கள் அடையாளங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Metaverse, virtual reality (VR) game, virtual reality (VR), metaverse crimes, digital crime