தடுப்பூசி விநியோகத்தை துரிதப்படுத்த பிரித்தானிய அரசு புதிய திட்டம்!
பிரித்தானியாவில் அடுத்தக் கட்ட கொரோனா தடுப்பூசி ரோல்-அவுட்டை துரிதப்படுத்த டிரைவ்-த்ரூ தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
நாடு முழுவதும் டிரைவ்-த்ரூ தடுப்பூசி மையங்களின் மிகப் பெரிய பிணைப்பை உருவாக்கவுள்ளதாகவும் தேசிய சுகாதார சேவை (NHS) அறிவித்துள்ளது.
நாட்டில் 50 சதவீதத்துக்கும் அதிகமான பெரியவர்கள் தங்கள் முதல் டோஸை பெற்றுள்ள நிலையில், அவர்களுக்கான இரண்டாவது டோஸையும் வழங்கும் பணிகள் துரிதப்படுத்துவதால் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என NHS கூறியுள்ளது.
Drive-through தடுப்பூசி மையத்தில் ஒருவர் தனது காரிலிருந்து இறங்காமல், உள்ளே அமர்ந்தபடியே தங்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம். இதனால், நேரம் மிகவும் மிச்சப்படும்.
கடந்த ஆண்டு, முதல் முறையாக பிரித்தானியா கிட்டத்தட்ட 125 Drive-through கொரோனா சோதனை மையங்களை அமைத்தது.
மேலும், உலகிலேயே முதல் முறையாக தடுப்பூசி மையங்களையும் பிரித்தானியா அறிமுகப்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலுருந்து இறக்குமதி தாமதபடுத்துவது, மக்கள் தங்கள் 2-வது டோஸை பெறுவதை தடுக்கமுடியாது என பிரித்தானிய அரசு கூறியுள்ளது.
பிரித்தானியா அதன் இலையுதிர் காலத்தில், காய்ச்சலுக்கும் சேர்த்து தடுப்பூசிகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக NHS தெறிவித்துள்ளது.

