'தடுப்பூசி மையங்கள் மூடப்படும்' முதல் டோஸை பெறாதவர்களுக்கு பிரித்தானிய அரசு எச்சரிக்கை!
பிரித்தானியாவில் வரும் திங்கள் முதல் வெகுஜன தடுப்பூசி மையங்கள் தற்காலிகமாக மூடப்படும் என தேசிய சுகாதார சேவை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதனால், NHS புதிய நியமனங்களை ஏற்பதை நிறுத்திக்கொள்வதற்குள், 50 வயதுக்கு மேற்பட்ட மக்கள் அல்லது மருத்துவ ரீதியாக பாதிக்கப்படக்கூடியவர்கள் உடனடியாக முன்பதிவு செய்து, தங்களுக்கான முதல் டோஸை பெற்றுக்கொள்ளுங்கள் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
50 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய எவரும் இங்கிலாந்திற்கான தேசிய முன்பதிவு முறையைப் பயன்படுத்தி மார்ச் 29-க்கு முன் ஓன்லைனில் முதல் டோஸுக்கு முன்பதிவு செய்யலாம்.
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மருத்துவ ரீதியாக பாதிக்கப்படக்கூடியவர்களும் சமீபத்திய வழிகாட்டுதலின் கீழ் தடுப்பூசிக்கு தங்களை பதிவு செய்யலாம்.
தடுப்பூசி விநியோக தடை ஏப்ரல் முழுவதும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், Devon, Cornwall மற்றும் Kent ஆகிய வெகுஜன தடுப்பூசி மையங்கள் ஒரு மாத காலத்துக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த சமயத்தில், இரண்டாவது டோஸ்களை வழங்க போதுமான தடுப்பூசி பங்குகள் இருப்பதை உறுதி செய்வதில் கவனம் செலுத்தப்படும் மற்றும் பல வெகுஜன மையங்களில் ஊழியர்கள் மீண்டும் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

