பிரித்தானியாவில் விரைவில் முடிவுக்கு வரும் கட்டுப்பாடுகள்... கொரோனா பாதித்தவர்கள் தனிமைப்படுத்த தேவையில்லை!
பிரித்தானியாவில் கொரோனா தொற்று விகிதம் தொடர்ந்து குறையும் பட்சத்தில், சுய-தனிமைப்படுத்தல் தேவையை ஒரு மாதத்திற்கு முன்பே அரசாங்கத்தால் முடிவுக்கு கொண்டு வர முடியும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் பேசிய போது பிரதமர் போரிஸ் ஜான்சன் இவ்வாறு தெரிவித்தார்.
ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரித்தானியாவில் தற்போதைய நிலையே தொடர்ந்தால், ஒரு மாதத்திற்கு முன்னதாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் சுய-தனிமைப்படுத்துவதற்கான சட்டப்பூர்வ தேவை உட்பட கடைசி கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை, அரசாங்கத்தால் முடிவுக்கு கொண்டு வர முடியும் என்பது எனது எதிர்பார்ப்பு என கூறினார்.
பிரித்தானியாவில் தற்போது அமுலில் இருக்கும் கட்டுப்பாடுகள் மார்ச் 24ம் திகதி அன்று முடிவடையிருக்கிறது.
இந்நிலையில் பிரதமரின் எதிர்பார்ப்பு படி நடந்தால், பிரித்தானியாவில் பிப்ரவரி மாத இறுதியோடு அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.