மில்லியன் கணக்கான அலைபேசிகளுக்கு அவசர எச்சரிக்கையை அனுப்பிய பிரித்தானிய அரசாங்கம்
மில்லியன் கணக்கான பிரித்தானியர்களின் அலைபேசிகளுக்கு அரசாங்கம் இன்று இரவு அவசர எச்சரிக்கையை அனுப்பியுள்ளது.
சேதத்தை ஏற்படுத்தும் காற்று
டார்ராக் புயல் (Storm Darragh) பிரித்தானியாவில் உயிருக்கு ஆபத்தான வானிலை சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதை அடுத்தே அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் இன்று மாலை 6.45 மணியளவில் அரசாங்கம் எச்சரிக்கையை அனுப்பும் என்று அமைச்சரவை அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.
சேதத்தை ஏற்படுத்தும் காற்று மற்றும் அதனுடன் தொடர்புடைய இடையூறுகள் பிரித்தானியர்களை அச்சுறுத்தலாம் என்று அதிகாரிகள் பொதுமக்களுக்கு தெரிவிக்க விரும்புவதாக செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
டிசம்பர் 7 ம் திகதி சனிக்கிழமை அதிகாலை 3 மணி முதல் காலை 11 மணி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் அடிப்படையில், வேல்ஸ் மற்றும் தென்மேற்கு பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அமைச்சரவை அலுவலகம் டிசம்பர் 6 வெள்ளிக்கிழமை இரவு 18.45 மணிக்கு அவசர எச்சரிக்கையை வெளியிடும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
மூன்று மில்லியன் மக்கள்
அவசரநிலை எச்சரிக்கை அமைப்பு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஒவ்வொரு இணைக்கப்பட்ட அலைபேசிகளுக்கும் செய்தியை அனுப்பும், இதில் சிவப்பு எச்சரிக்கை பற்றிய தகவல்கள் மற்றும் சனிக்கிழமை வரை எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களும் விளக்கப்பட்டிருக்கும்.
அலைபேசிகள் சைலண்ட் செட் செய்யப்பட்டிருந்தாலும் சைரன் போன்ற சத்தத்தை எழுப்பும். ஒலி மற்றும் அதிர்வு சுமார் 10 வினாடிகள் நீடிக்கும். பிரித்தானியா மற்றும் வேல்ஸில் சுமார் மூன்று மில்லியன் மக்கள் தொடர்புடைய அவசர எச்சரிக்கை செய்தியைப் பெறுவார்கள் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
மேலும், புயலின் தீவிரம் நாட்டின் மிக மோசமாக பாதிக்கப்பட வாய்ப்பிருக்கும் பகுதிகளில் அலைபேசி சிக்னலை பாதிக்கலாம் என்று வானிலை அலுவலகம் எதிர்பார்க்கும் நிலையில் இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதுடன், பலத்த காற்றினால் அலைபேசி கவரேஜை பாதிக்கும் மின்வெட்டு ஏற்படும் என்றும் அரிதான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |