ஜேர்மனியில் தடுப்பூசி பெற்ற பிரித்தானியர்களுக்கு பிரித்தானியாவில் கட்டாய தனிமைப்படுத்தல்: கோபத்தில் மக்கள் எடுத்துள்ள நடவடிக்கை
ஜேர்மனியில் தடுப்பூசி பெற்ற பிரித்தானியர்களை தனிமைப்படுத்தல் இல்லாமல் பிரித்தானியாவுக்குள் அனுமதிப்பது தொடர்பில் இணையத்தில் புகார் மனு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், பிரித்தானிய போக்குவரத்துச் செயலர் Grant Shapps, ஜூலை 19 முதல் ஆம்பர் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து பிரித்தானியா வரும் முழுமையான கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட பிரித்தானியர்கள், தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியதில்லை என்று அறிவித்திருந்தார்.
ஆனால், பிரித்தானிய அரசால் வழங்கப்படும் தடுப்பூசிகளைப் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும். அதன்படி, ஜேர்மனியில் தடுப்பூசி பெற்றுக்கொண்ட பிரித்தானியர்கள், பிரித்தானியாவில் வாழும் தங்கள் குடும்பத்தினரைக் காண்பதற்காக பிரித்தானியா சென்றால், அவர்கள் ஜேர்மனியில் தங்கள் தடுப்பூசியை போட்டுக்கொண்டிருந்தால் அவர்கள் தங்களை 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்வதோடு, கொரோனா பரிசோதனைக்காக 170 பவுண்டுகளும் செலவிடவேண்டியிருக்கும்.
We just want to see our families. We don't even want to go on holiday but many of us haven't seen our relatives for 18-24 mths which feels like a lifetime in a pandemic. We are double vaccinated and coming from countries with fewer cases so why are we excluded? https://t.co/9djaHJ90QF
— British in Europe (@BritishInEurope) July 8, 2021
இந்த அறிவிப்பு வெளிநாடுகளில் வாழும் பிரித்தானியர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஜேர்மனியில் தடுப்பூசி பெற்ற பிரித்தானியர்களை தனிமைப்படுத்தல் இல்லாமல் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கக் கோரி இணையத்தில் உருவாக்கப்பட்டுள்ள புகார் மனு ஒன்றில் இதுவரை 49,600 பேர் கையெழுத்திட்டுள்ளார்கள்.
அந்த எண்ணிக்கை 100,000ஐ எட்டும் பட்சத்தில், இந்த விடயம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Can someone explain to me why Germany hasn’t been added to the green list? @UKinGermany @transportgovuk
— Matt Bristow (@psychomologist) July 14, 2021
The 7 day incidence here is 7.1 (and it’s 329 in the UK!)
Gutted that this means I won’t be able to visit my family, as the UK still won’t recognise my vaccination status. https://t.co/84ZTcc2m7j