13 ஆண்டுகளுக்கு முன் மாயமான இந்திய வம்சாவளியினர்: அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு
The sister of a British man who disappeared on a sightseeing trip to Paris has welcomed Government's announcement about improved support: வெளிநாடுகளில் மாயமானவர்கள் தொடர்பில் அரசு எடுக்க இருக்கும் நடவடிக்கை குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பை, மாயமான பிரித்தானியர் ஒருவரின் சகோதரி வரவேற்றுள்ளார்.
13 ஆண்டுகளுக்கு முன் பிரான்சுக்கு சுற்றுலா சென்ற இந்திய வம்சாவளியினர் ஒருவர் மாயமானார்.
பிரான்சில் மாயமான இந்திய வம்சாவளியினர்
இந்திய வம்சாவளி பிரித்தானியரான சஞ்சீவ் (Sanjiv Kundi), 2013ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகரான பாரீஸுக்கு சுற்றுலா புறப்பட்டார். அப்போது அவருக்கு வயது 41.

பாரீஸிலுள்ள Gare du Nord ரயில் நிலையத்தில் கடைசியாக காணப்பட்ட சஞ்சீவிடமிருந்து பிறகு எந்த தகவலும் இல்லை.
அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு
இந்நிலையில், பிரித்தானிய அரசு, Missing People என்னும் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, வெளிநாடுகளில் மாயமான பிரித்தானியர்களின் குடும்பங்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
அது குறித்து ஊடகவியலாளர்களிடம் பேசிய வெளியுறவு அலுவலக அமைச்சரான ஸ்டீபன் (Stephen Doughty), நம் அன்பிற்குரியவர்கள் எங்கிருக்கிறார்கள், அவர்களுக்கு என்ன ஆனது என்பது தெரியாமல் இருப்பது எந்தக் குடும்பத்துக்கும் மிகவும் கடினமானதாகும்.

ஆகவே, Missing People என்னும் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, வெளிநாடுகளில் மாயமான பிரித்தானியர்களின் குடும்பங்களுக்கு உதவ நாம் நடவடிக்கை எடுக்க இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
அரசின் அறிவிப்பை வரவேற்றுள்ள சஞ்சீவின் சகோதரியான சத்வீர் (Satvir, 56), என்றாலும், வெளிநாடுகளில் மாயமானவர்கள் தொடர்பில் அரசு இன்னும் கூடுதலாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என தான் கருதுவதாக தெரிவித்துள்ளார்.
என் பெற்றோர் வயதானவர்கள், நான்கு மகள்களுக்கிடையே, சஞ்சீவ் அவர்களுக்கு ஒரே மகன் என்று கூறும் சத்வீர், அப்படியிருக்கும்போது, அவர்களுடைய மன நிலை எப்படியிருக்கும், தங்கள் மகனை பார்க்காமலேயே இந்த உலகத்தை விட்டுப் போகப்போகிறோம் என்பதுதான் அவர்களுக்கு இருக்கும் பெரிய பயம் என்கிறார்.