இனி 5 வயது முதல் கொரோனா தடுப்பூசி: பிரித்தானிய அரசு அதிரடி!
பிரித்தானியாவில் கொரோனா தடுப்பூசிகள் 15 வயது முதல் செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது 5 முதல் 11 வயது குழந்தைகளும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சர்க்கரை நோய், நோய் எதிா்ப்பு சக்தி குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிய நிலையில், பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு கொரோனாவை கட்டுப்படுத்தும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ்சிடம் இருந்து தற்காத்துக்கொள்ள தடுப்பூசி தான் ஒரே தீர்வு என்று உலக அமைப்புகள் அனைத்தும் கூறினர். இதனை தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் அறிவுறுத்தி, பல்வேறு நாடுகளும் இதனை செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதன் விளைவாக பல்வேறு நாட்டு மக்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். அதனை தொடர்ந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வயதை 18லிருந்து 15தாக அனைத்து நாடுகளும் குறைத்து தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொண்டது.
இந்த நிலையில் பிரித்தானிய அரசு 5 முதல் 11 வயது குழந்தைகளும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் மேலும் சர்க்கரை நோய், கற்றலில் குறைபாடு நோய் எதிா்ப்பு சக்தி குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என பிரித்தானிய சுகாதார துறை அறிவித்துள்ளது.
இந்த உத்தரவின் அடிப்படையில் பிரித்தானியாவில் மொத்தம் 5 லட்சம் சிறுவர், சிறுமியர்களுக்கு விரைவில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.