தண்ணீர்ப் பஞ்சத்தை தவிர்க்கவேண்டுமா? பழைய மின்னஞ்சல்களை டெலீட் செய்யுங்கள்: பிரித்தானியா கோரிக்கை
பிரித்தானியாவில் தண்ணீர்ப் பஞ்சத்தை தவிர்க்கவேண்டுமா? உங்கள் பழைய மின்னஞ்சல்களை டெலீட் செய்யுங்கள் என வித்தியாசமான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது பிரித்தானிய அரசு.
ஒரு வித்தியாசமான கோரிக்கை
பிரித்தானியா நான்காவது வெப்ப அலையை எதிர்கொண்டுவருகிறது. இங்கிலாந்திலுள்ள ஐந்து இடங்களில் தற்போது வறட்சி நிலவுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, தண்ணீர் பாதுகாப்புக்காக மக்கள் தங்கள் பங்கைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்கிறார் தண்ணீர் சுற்றுச்சூழல் இயக்குநரான ஹெலன் வேக்ஹாம்.
குழாயை சரியாக மூடுவது, பழைய மின்னஞ்சல்களை டெலீட் செய்வது போன்ற நீங்கள் செய்யும் சின்னச் சின்ன விடயங்கள் நமது நீர்நிலைகளின் நலனை பாதுகாக்கும் என்கிறார் அவர்.
மின்னஞ்சல்களுக்கும் தண்ணீர்ப்பஞ்சத்துக்கும் என்ன சம்பந்தம்?
அதாவது, மின்னஞ்சல்கள், புகைப்படங்கள் ஆகியவை தரவு மையங்களில் (data centers) சேமித்துவைக்கப்படும்.
இந்த தரவு மையங்களை சூடாகாமல் தவிர்க்க, அவற்றை குளிர்ச்சியாக வைக்க அதிக அளவில் தண்ணீர் தேவைப்படும்.
ஆகவேதான் தரவு மையங்கள் சூடாகாமல் தவிர்ப்பதற்காக, அவற்றை குளிர்விப்பதற்காக தண்ணீர் வீணாகாமல் தடுப்பதற்காக, பழைய மின்னஞ்சல்களை டெலீட் செய்யுமாறு பிரித்தானிய அரசு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |