ஹொட்டல்களை விட்டு வெளியேற மறுக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு அரசு எச்சரிக்கை
பிரித்தானியாவில், ஹொட்டல்களை விட்டு வெளியேற மறுக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
ஒரு எச்சரிக்கை
லேபர் அரசு, இந்த ஆண்டு நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடியும் முன், அதிக செலவு பிடிக்கும் ஹொட்டல்களில் புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கவைக்கப்படுவதற்கு முடிவு கட்ட உறுதி பூண்டுள்ளது.
அவ்வகையில், ஹொட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களை ஹொட்டல்களை விட்டு வெளியேற்ற நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது.
வெளியேற மறுப்பவர்களுக்கு தங்கும் இடமும் கிடைக்காது, அரசு அவர்களுக்கு அளித்துவரும் நிதி உதவியும் நிறுத்தப்படும் என உள்துறை அலுவலகம் எச்சரித்துள்ளது.
இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 13ஆம் திகதி, எத்தியோப்பிய புலம்பெயர்ந்தோரான Hadush Gerberslasie Kebatu (38) என்பவர், இங்கிலாந்திலுள்ள Epping என்னுமிடத்தில், 13 வயது பிரித்தானிய சிறுமி ஒருத்தியை முத்தமிட முயன்றதாகக் கூறி அங்கு பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
சிறுமியிடம் அத்துமீறியதாக, துஷ்பிரயோகக் குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.
அதைத் தொடர்ந்து, இந்த வார இறுதியிலும் ஏராளமானோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளதால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த பிரச்சினையைத் தொடர்ந்துதான் புகலிடக்கோரிக்கையாளர்களை, குறிப்பாக, குடும்பமாக இல்லாமல் தனியாக தங்கியிருக்கும் ஆண்களை ஹொட்டல்களை விட்டு வெளியேற்ற நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |