தொடர்ந்து மூன்று மாதங்களாக பிரித்தானியாவில் மளிகைப்பொருட்கள் விலை அதிகரிப்பு
பிரித்தானிய மக்கள் தொடர்ந்து மூன்று மாதங்களாக மளிகைப்பொருட்கள் விலை உயர்வால் அவதியுற்றுவந்ததாக துறைசார் தரவுகள் தெரிவிக்கின்றன.
மூன்று மாதங்களாக மளிகைப்பொருட்கள் விலை அதிகரிப்பு
சந்தை ஆய்வு நிறுவனமான Kantar என்னும் அமைப்பு, வருடாந்திர மளிகைப்பொருட்கள் விலை பணவீக்கம், டிசம்பர் 1ஆம் திகதி வரையிலான நான்கு வாரங்களில், முந்தைய நான்கு வார காலகட்டத்தை ஒப்பிடும்போது, 2.6 சதவிகிதம் உயர்ந்திருந்ததாக தெரிவித்துள்ளது.
டூத்பிரஷ்கள், ஸ்மூதிக்கள், பழச்சாறுகள் மற்றும் வாசனை திரவியங்கள் முதலான பொருட்களின் விலை வேகமாக அதிகரித்துவருவதாகவும், வீட்டுக்கான காகித தயாரிப்புகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கான உணவுகள் முதலானவற்றின் விலை வேகமாக குறைந்துவருவதாகவும் Kantar தெரிவித்துள்ளது.
REUTERS/Mina Kim/File Photo Purchase Licensing Rights
இந்நிலையில், பிரித்தானியர்கள், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான பாரம்பரிய உணவுக்காக, கடந்த ஆண்டைவிட சராசரியாக 6.5 சதவிகிதம் அதிகம் செலவிடவேண்டியிருக்கும் என்கிறது Kantar அமைப்பு.
அதாவது, இந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான பாரம்பரிய உணவுக்காக பிரித்தானியர்கள் 32.57 பவுண்டுகள் செலவிடவேண்டியிருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |