லண்டன் பாதசாரிகள் மீது பாய்ந்த கார்...பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
ஹாரோவின் செயின்ட் ஆன்ஸ் சாலையில் பயங்கர விபத்து.
கார் மோதியதில் ஐந்து பாதசாரிகள் படுகாயம்
பிரித்தானியாவின் ஹாரோ பகுதியில் பாதசாரிகள் மீது கார் ஒன்று மோதியதில் 5 பேர் வரை படுகாயமடைந்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு லண்டனின் ஹாரோவில் (Harrow) உள்ள செயின்ட் ஆன்ஸ் சாலையில் வியாழன்கிழமை 18.10மணியளவில் நடந்து சென்று கொண்டு இருந்த பாதசாரிகள் மீது கார் ஒன்று வேகமாக மோதி விபத்து ஏற்படுத்தியது.
Image: Gosha Miel
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார், லண்டன் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் ஏர் ஆம்புலன்ஸ் சேவையுடன் அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்.
இதில் ஐந்து பேர் வரை படுகாயமடைந்து இருக்கும் நிலையில், அவர்களுக்கு அவசரகால பணியாளர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவற்றில் 60 வயதுடையவர் என நம்பப்படும் காரை ஓட்டிச் சென்றவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: ட்விட்டரில் பாட்காஸ்ட் வசதி அறிமுகம்....வெளியாகியுள்ள முக்கிய தகவல்
விபத்து ஏற்பட்ட இடங்களில் பொலிஸார் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவத்தை பயங்கரவாதம் தொடர்பானதாக கருதவில்லை என்று மைலண்டன் தெரிவித்துள்ளது.