வால்னேவா நிறுவனத்துடன் மொத்தம் 100 மில்லியன் டோஸ்களை ஒப்பந்தம் செய்த பிரித்தானியா!
வால்னேவா நிறுவனத்திடமிருந்து மொத்தம் 100 மில்லியன் தடுப்பூசி டோஸ்களை இன்று ஒப்பந்தம் செய்த நிலையில், 2022-க்குள் 400 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி டோஸ்களை பெற பிரித்தானிய அரசு உறுதிசெய்துள்ளது.
பிரான்ஸ் நாட்டைத் தலைமை இடமாகக் கொண்ட Valneva எனும் மருந்து தயாரிப்பு நிறுவனம் பிரித்தானியாவின் ஸ்காட்லாந்து பகுதியில் கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது.
பிரித்தானிய அந்நிறுவனத்திடமிருந்து 60 மில்லியன் தடுப்பூசிகளை ஏற்கெனவே ஆர்டர் செய்துள்ளது.
இந்நிலையில், West Lothianல் உள்ள Valnevaவின் தளத்தில் மேலும் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுல் என 100 புதிய திறமையான உள்ளூர் பணியாளர்களை நியமித்து, உற்பத்தியை அதிகரிக்க பிரித்தானியா ஆதரித்துள்ளது.
இதனையடுத்து, கூடுதலாக 40 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை 2022 ஆண்டிற்குள் விநியோகிக்க Valneva நிறுவனத்துடன் பிரித்தானிய அரசு இன்று ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தம் முடிவானதையடுத்து, பிரித்தானியா 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளுக்குள் மொத்தம் 400 மில்லியனுக்கும் அதிகமான டோஸ்களை பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் செயல்திறன் மிக்கது என நிரூபிக்கப்பட்டவுடன் அதை வழங்க ஸ்காட்லாந்து தளம் தயாராக உள்ளது. அவை விநியோகிக்க தயாரானதும் அதனை அரசு அங்கீகரிக்க திட்டமிட்டுள்ளது.
இது அங்கீகரிக்கப்பட்டால், 2021-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் 60 மில்லியன் டோஸ்கள் மக்களுக்கு வழங்கத் தொடங்கப்படும், மீதமுள்ள 40 மில்லியன் 2022-ல் வழங்கப்படும்.
பிரித்தானிய அரசாங்கம் இந்த வெற்றிகரமான தடுப்பூசி தயாரிக்க 300 மில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்துள்ளது.
வால்னேவாவின் லிவிங்ஸ்டன் தளம் பிரித்தானியா மற்றும் உலகெங்கிலும் ஏற்றுமதி செய்ய ஆண்டுதோறும் 250 மில்லியன் டோஸ் வரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.