2022ல் கொரோனாவுடன் வாழ வேண்டும்! பிரித்தானியர்களுக்கு சஜித் ஜாவித் எச்சரிக்கை
பிரித்தானியர்கள் 2022ல் கொரோனா வைரஸுடன் ‘உடன் வாழ’ வேண்டும் என்று நாட்டின் சுகாதாரா செயலாளர் சஜித் ஜாவித் கூறியுள்ளார்.
டெய்லி மெயிலில் சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் எழுதியதாவது, ஐரோப்பாவில் சில குறைந்த கட்டுப்பாடுகளுடன் 2022ல் அடியெடுத்து வைத்தது பிரித்தானியா.
இனி விதிக்கப்படும் கூடுதல் கட்டுப்பாடுகள் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாம் எடுக்கும் கடைசி முயற்சியாக இருக்க வேண்டும்.
ஆறு மாதங்களுக்கு முன்பு நான் இந்த பதவிக்கு வந்ததிலிருந்து, சுகாதாரம், சமூகம் மற்றும் லாக்டவுன்களால் ஏற்பட்ட பொருளாதார சரிவுகள் குறித்தும் நான் மிகுந்த விழிப்புணர்வுடன் இருந்தேன்.
எனவே, வைரஸுடன் வாழ்வதற்கும், எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்கும் என்னால் முடிந்த அளவிற்கு சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.
அடுத்த மாதத்தில் கொரோனா பாதிப்புகளில் இன்னும் பெரிய அதிகரிப்பை சந்திப்பதை தவிர்க்க முடியாதது, தொற்றுநோய் ஒழிய இன்னும் வெகு நாட்கள் உள்ளது என்று சஜித் ஜாவித் எச்சரித்தார்.
மேலும், ஒமிக்ரான் அலை NHS திறனுக்கு பெரிய சோதனையாக இருக்கும் என்று சஜித் ஜாவித் கூறினார்.