ட்ரம்பை நம்பவேண்டாம்... பிரித்தானிய மக்களுக்கு மருத்துவத்துறைச் செயலர் கூறும் ஆலோசனை
ட்ரம்பை நம்பாதீர்கள், பிரித்தானிய மருத்துவர்களை, பிரித்தானிய அறிவியலாளர்களை, மருத்துவ அமைப்பை நம்புங்கள் என்கிறார் பிரித்தானிய சுகாதாரத்துறைச் செயலரான வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting).
என்ன விடயம்?
விடயம் என்னவென்றால், அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப், கர்ப்பிணிகள் பாராசிட்டமால் என்னும் வலி நிவாரணி எடுத்துக்கொள்வதால், அவர்களுடைய கருவிலிருக்கும் குழந்தைக்கு ஆட்டிஸக் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார் ட்ரம்ப்.
எந்த ஆதாரமும் இல்லாமல் பாராசிட்டமாலுக்கும் ஆட்டிஸத்துக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறும் அரசியல்வாதியான ட்ரம்பை நம்பாதீர்கள் என்கிறார் வெஸ்.
ஆக, பிரித்தானிய மக்களுக்கு நான் கூறுவது என்னவென்றால், ட்ரம்பை மட்டுமல்ல, அரசியல்வாதி என்னும் முறையில் என்னைக்கூட நீங்கள் நம்பவேண்டாம், பிரித்தானிய மருத்துவர்களை, பிரித்தானிய அறிவியலாளர்களை, பிரித்தானிய மருத்துவ அமைப்பான NHSஐ நம்புங்கள் என்கிறார் வெஸ்.
இதற்கிடையில், உலக சுகாதார அமைப்பு உட்பட மருத்துவ அமைப்புகளும், உலக நாடுகள் பலவும் ட்ரம்பின் ஆட்டிஸம் குறித்த கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |