இந்தியாவுக்கு உதவ பிரித்தானியா அனுப்பிய உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம்! என்னென்ன இருந்தது தெரியுமா? முழு விபரம்
கொரோனாவால் போராடி வரும் பிரித்தானியாவுக்கு உதவும் வகையில், பிரித்தானியா உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம் மூலம் மருத்துவ உபகரணங்களை அனுப்பியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக தலைநகரான டெல்லி, மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
போதிய ஆக்ஸிஜன் இல்லாமல் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவதால், இந்தியா உலக நாடுகளின் உதவியை நாடியுள்ளது. அதன் படி பிரித்தானியா அரசு 18 டன் ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் மற்றும் 1,000 வென்டிலேட்டர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக பிரித்தானியாவின் வெளியுறவு, காமன்வெல்த் மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.
இந்த உயிர்காக்கும் உபகரணங்கள் ஏற்றப்பட்ட உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான அன்டனோவ்-124 பெல்பாஸ்ட் நகரிலிருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரித்தானியா வெளியுறவுத் துறை செயலாளர் டோமினிக்ராப் கூறுகையில், கொரோனா பெருந்தொற்றை சமாளிக்க பிரித்தானியாவும், இந்தியாவும் இணைந்து பணியாற்றி வருகிறது.
அந்த வகையில் பிரித்தானியாவின் வடக்கு அயர்லாந்தில் உபரியாக உள்ள ஆக்சிஜன் ஜெனரேட்டர்களை இந்தியாவுக்கு அனுப்பி உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.