Hertfordshire பகுதியில் கொட்டி தீர்த்த கனமழை: குவிந்த 260 வெள்ள அறிக்கைகள்: 45 சொத்துக்கள் பாதிப்பு!
பிரித்தானியாவின் ஹெர்ட்ஃபோர்ட்ஷயரில் கிட்டத்தட்ட 260 வெள்ளப்பெருக்கு அறிக்கைகள் வெளிவந்துள்ளன.
பிரித்தானியாவில் வெள்ளப்பெருக்கு
பிரித்தானியாவின் பல பகுதிகளில் 2 மாதங்களில் பொழிய வேண்டிய மழை 24 மணி நேரத்தில் கொட்டி தீர்த்தது கடுமையான வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் ஆம்பர் எச்சரிக்கையும், மீதமுள்ள பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Don't drive through flood water.
— Environment Agency (@EnvAgency) September 23, 2024
Due to heavy rain across England, many roads have flooded.
Plan journeys ahead of time and check your local flood risks: https://t.co/qP9rpumIij pic.twitter.com/L8HjcpXfJ5
இந்த கனமழை காரணமாக சில இடங்களில் சாலைகள் மூடப்பட்டுள்ளன, ரயில் சிக்னல்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கையானது இன்று இரவு 9 மணி வரை நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
260 வெள்ளப்பெருக்கு அறிக்கைகள்
இந்நிலையில் ஹெர்ட்ஃபோர்ட்ஷயர் கவுண்டி கவுன்சில்(Hertfordshire County) வெள்ளப்பெருக்கு அறிக்கைகளால் மூழ்கியுள்ளது.
இப்பகுதியில் சனிக்கிழமை முதல் இன்று வரை கிட்டத்தட்ட 260க்கும் மேற்பட்ட வெள்ள பாதிப்பு அறிக்கைகள் வந்துள்ளன.
? 260 flood reports in Hertfordshire! ?
— Hertfordshire County Council (@hertscc) September 23, 2024
Our teams are working hard to respond.
Amber & Yellow weather warnings in place until 9pm.
Stay safe: avoid flood water, plan ahead, check on neighbours.
Report flooding at https://t.co/EE4mwR0NDO ?️ #HertsFloods #StaySafe pic.twitter.com/J3W9v9A6Bh
இதில் பெரும்பாலான அறிக்கைகள் St Albans, Harpenden மற்றும் Letchworth பகுதிகளில் இருந்து வந்துள்ளன.
Hertfordshire, Bedfordshire மற்றும் Kent பகுதிகளில் உள்ள 45 சொத்துக்கள் ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுற்றுச்சூழல் முகமை தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
வெள்ள காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |