பிரித்தானியாவில் 200 கைதிகள் இடமாற்றம்! சிறைச்சாலை முழுவதும் கதிரியக்க வாயு அபாயம்

United Kingdom Prison
By Thiru Mar 10, 2024 05:20 PM GMT
Report

பிரித்தானியாவின் டெவான் பகுதியில் அமைந்துள்ள HMP Dartmoor சிறைச்சாலை தற்போது கவலைக்கிடமான பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது.

சிறைச்சாலையில் கதிரியக்க வாயு

பிரித்தானியாவின் டெவான்(Devon) பகுதியில் உள்ள HMP Dartmoor சிறைச்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில், ரேடான் என்ற நிறமற்ற, மணமற்ற கதிரியக்க வாயுவின் அளவு(radioactive gas) அதிகரித்து இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து கைதிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பிரித்தானியாவில் 200 கைதிகள் இடமாற்றம்! சிறைச்சாலை முழுவதும் கதிரியக்க வாயு அபாயம். HMP Dartmoor radioactive gas leak, Radon gas in Devon prison, Inmate relocation Dartmoor, Radioactive prison cells UK, HMP Dartmoor safety concerns,

பாதுகாப்பு நடவடிக்கையாக சுமார் 184 சிறை அறைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக, 200 கைதிகள் வேறு சிறைகளுக்கு தற்காலிகமாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 ரேடான்(radon) அளவை நிரந்தரமாக குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த இடமாற்றங்கள் தற்காலிகமானவை என்று சிறைச்சாலை துறை உறுதியளித்துள்ளது.

ரேடான் என்றால் என்ன?

ரேடான் என்பது பாறைகள் மற்றும் மண்ணில் உள்ள யுரேனியம் சிதைவதால் உருவாகும் இயற்கையாக காணப்படும் வாயு.

குறைந்த அளவு வெளிப்பாடு பொதுவாக பெரிய ஆரோக்கிய அபாயத்தை ஏற்படுத்தாது, ஆனால் அதிகரித்த அளவிற்கு மத்தியில் நீண்ட நேரம் இருப்பது நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.

பிரித்தானியாவில் 200 கைதிகள் இடமாற்றம்! சிறைச்சாலை முழுவதும் கதிரியக்க வாயு அபாயம். HMP Dartmoor radioactive gas leak, Radon gas in Devon prison, Inmate relocation Dartmoor, Radioactive prison cells UK, HMP Dartmoor safety concerns,radon gas level across the UK

விமர்சகர்கள் கேள்வி

HMP Dartmoor சிறையில் ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலை, நிகழ்வுகளின் கால அளவை பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

சில அறிக்கைகளின்படி, 2020 ஆம் ஆண்டிலேயே சிறையில் ரேடான் கண்டறியப்பட்டது. அதிகாரிகள் இந்த பிரச்சினையை கையாள்வதற்கு ஏன் இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டனர் என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

சிறைச்சாலை துறை உறுதி

ரேடான் அளவை நிரந்தரமாகக் குறைப்பதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், பாதுகாப்பானது என கருதப்பட்டதும் இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகள் மீண்டும் அந்த வளாகத்திற்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

HMP Dartmoor radioactive gas leak, Radon gas in Devon prison, Inmate relocation Dartmoor, Radioactive prison cells UK, HMP Dartmoor safety concerns, 

13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US