பேட்மேன் புகழ் பிரபல பிரித்தானிய நடிகர் மரணம்
பிரித்தானியாவைச் சேர்ந்த பிரபல நடிகர் டாம் வில்கின்சன் தனது 75வது வயதில் காலமானார்.
டாம் வில்கின்சன்
ஹாலிவுட்டில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் டாம் வில்கின்சன் (Tom Wilkinson). பிரித்தானியாவின் லீட்ஸில் பிறந்த இவர், 1976ஆம் ஆண்டில் ஹாலிவுட்டில் வெளியான Smuga cienia என்ற படத்தில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த வில்கின்சன், 2005யில் வெளியான பேட்மேன் பிகின்ஸ் (Batman Begins) மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.
அவர் Carmine Falcone எனும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருந்தார். வில்கின்சன் இருமுறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
Ian Gavan/Getty Images
OBE அதிகாரி
திரையுலகில் 130க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள வில்கின்சன், கோல்டன் குளோப் உட்பட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.
2005ஆம் ஆண்டில் நாடகத்திற்கான இவரது சேவைகளுக்காக The Order of the British Empire (OBE) அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் 75 வயதான டாம் வில்கின்சன் நேற்று (டிசம்பர் 30) காலமானார். அவரது மறைவு ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Warner Bros. Pictures / Everett Collection
Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |