ஒரு பவுண்டுக்கு வீடு வாங்கி சொர்க்க மாளிகையாக மாற்றிய பெண்! அசரவைக்கும் புகைப்படங்கள்
பிரித்தானியாவில் 1 பவுண்டுக்கு வீட்டை வாங்கிய 'வீடற்ற' பெண்மணி, அந்த வீட்டை ஒரு அமைதியான சொர்க்மாக உருவாக்கியுள்ளார்.
2015-ல் Liverpool John Moores பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டதாரியாக இருந்த வீடற்ற நபரான Maxine Sharples, லிவர்பூலின் நகர சபையால் அமைக்கப்பட்ட ஒரு பவுண்ட் திட்டத்தின் மூலம் வீட்டை விண்ணப்பித்து வாங்கினார்.
பாழடைந்த நிலையில் இருந்த இந்த வீடு Watertree-ல் உள்ள Webster சாலையில் அமைந்துள்ளது.
வீட்டை வாங்கிய பிறகு, மாக்சின் தனது சொந்த பணத்தையும் வளங்களையும் பயன்படுத்தி நகர சபையுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அதை மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்தார். அவரைப் பொறுத்தவரை இது ஒரு நீண்ட, சோர்வுற்ற செயல்முறையாகும்.
35 வயதான யோகா ஆசிரியரான மாக்சின் இந்த வீட்டின் சீரமைப்புப் பணிகளின் போது ஒரு வாடகை வீட்டின் வாழ்ந்துவந்தார்.
பெரும்பலான வேலைகளை அவரே செய்துள்ளார். சுழலும் சுத்தியலால் வீட்டை செங்கல்லாக மாற்றுவதற்கு ஒன்பது மாதங்கள் ஆனது மற்றும் அண்டை வீட்டாரிடம் இருந்து மின்சாரம் வாங்கியுள்ளார்.
கூரையின்மீது ஒரு மரம் வேரூன்றி வீடு துளையிடப்பட்டிருந்தது, மேலும், சுவர்கள் ஊறிப்போய் வீட்டுக்குள் நீர் உட்புகுந்திருந்த்து, எலி தொல்லைகள், என எல்லா பிரச்சினைகளும் இருந்தது.
27 கடினமான மாதங்கள் உழைத்து அந்த பாழடைந்த வேட்டை அவர் அழகான இடமாக, மனிதர்கள் வாழக்கூடிய இல்லமாக மாற்றியுள்ளார்.
Images: Liverpool Echo