பிரித்தானியாவின் வெப்ப அலைக்கு என்ன காரணம்?
பிரித்தானியாவில் இந்த மாதம் வரலாறு காணாத வெப்ப அலை வீசியதற்கு மனிதர்கள் உருவாக்கிய பருவநிலை மாற்றமே காரணம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மேற்கு ஐரோப்பாவில் கடந்த 20ம் தேதி வெப்ப அலை உச்சத்தை தொட்ட போது, பிரித்தானியாவில 34 பகுதிகளில் வரலாறு காணாத வெப்பநிலை பதிவு செய்யப்பட்டது.
இதுபோன்ற பருவநிலையில், தொழில் புரட்சிக்கு முந்தைய 19ம் நூற்றாண்டில் வெப்பநிலை எவ்வாறு இருந்தது என்பதையும், தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள வெப்பநிலையையும் ஒப்பிட்டு சர்வதேச நிபுணர் குழுவொன்று ஆய்வு செய்தது.
அதில் பசுமை வாயுக்களை காற்றில் கலப்பதன் மூலம் மனிதர்களால் உருவாக்கப்படும் புவி வெப்பமாதல் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் பருவநிலை மாற்றத்தால் தான் பிரித்தானியாவில் வரலாறு காணாத வெப்ப அலை உருவானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.