பிரித்தானியாவில் குடியிருப்புகளின் விலையில் பெரும் வீழ்ச்சி: வெளிவரும் காரணங்கள்
பிரித்தானியாவில் வீடுகளின் விலைகள் நவம்பர் மாதத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மிகப்பெரிய விகிதத்தில் வீழ்ச்சியடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வீடுகளின் விலை வீழ்ச்சி
கடந்த 2020 ஜூன் மாதத்திற்கு பின்னர், இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தான் வீடுகளின் விலையானது 1.4% வரையில் வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் அக்டோபரில் 0.9% அளவுக்கு வீழ்ச்சி பதிவாகியிருந்தது.
@getty
மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வீடுகளின் விலையில் 10% வரையில் வீழ்ச்சியடையலாம் என சில நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், ஓராண்டில் வீடுகளின் விலை அதிகரிப்பு என்பது அக்டோபரில் 7.2% ஆக இருந்தது நவம்பரில் 4.4% ஆகக் குறைந்துள்ளது.
செப்டம்பரில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய லிஸ் ட்ரஸ் அரசாங்கத்தின் மினி பட்ஜெட்டைத் தொடர்ந்து அடமான விகிதங்கள் அதிகரிக்க, அத்துடன் பாங்க் ஆஃப் இங்கிலாந்து அதன் அடிப்படை விகிதத்தையும் அதிகரித்ததே காரணமாக பார்க்கப்படுகிறது.
அடிப்படை விகிதம் உயர்வு
அடிப்படை விகிதம் என்பது கடந்த ஆண்டு 0.1% என இருந்த நிலையில், தொடர்ந்து 9 முறை அதிகரிக்கப்பட்டு தற்போது 3% என உள்ளது. இது மில்லியன் கணக்கான வீடு உரிமையாளர்களை பாதித்துள்ளது.
@reuters
மேலும், வாழ்க்கை செலவு அதிகரித்து வரும் நிலையில், சொத்துக்களை வாங்க திட்டமிடும் மக்கள் அதை தற்போதைக்கு கைவிடும் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.