ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி
ஜனவரி மாதம் 1ஆம் திகதிக்கு முன், 9 பொருட்களை தங்கள் காரில் தயாராக வைத்துக்கொள்ளுமாறு பிரித்தானியர்களை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவுறுத்தியுள்ளது.
9 பொருட்களை தயாராக வைத்துக்கொள்ளுங்கள்
ஜனவரி மாதம் 1 மற்றும் 2ஆம் திகதிகளில் பிரித்தானியாவில் வானிலை கடுமையானதாக இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டின் முதல் வாரம் கடும் குளிர் காற்றுடன் துவங்கலாம் என தெரிவித்துள்ள வானிலை ஆராய்ச்சி மையம், ஆர்க்டிக் மற்றும் வட காற்றுகள் பிரித்தானியா முழுவதும் கடுமையான குளிரைக் கொண்டுவரும் என்று கூறியுள்ளது.
ஜனவரி 1 மற்றும் 2ஆம் திகதிகளுக்கு, ஸ்கொட்லாந்துக்கு மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Getty
பனிப்பொழிவு மற்றும் பனியால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படலாம் என தெரிவித்துள்ள வானிலை ஆராய்ச்சி மையம், கார்களில் பயணிப்போர், தங்கள் கார்களில் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
அவையாவன, வெதுவெதுப்பைக் கொடுக்கும் உடைகள், உணவுப்பொருட்கள், தண்ணீர், போர்வை, டார்ச், பனிக்கட்டியை விலக்கும் கருவி, எச்சரிக்கை முக்கோணம், தொலைவிலிருந்து பார்த்தாலும் தெரியும் வகையிலான மேலாடை மற்றும் காரின் உதவியுடன் சார்ஜ் செய்யும் ஒரு சார்ஜர்.
மேலும், சாரதிகள் தங்கள் ஸ்மார்ட்போனை டார்ச் ஆகவும் மேப்களுக்காகவும் பயன்படுத்தாமல், தனியாக டார்ச் மற்றும் காகித மேப் ஒன்றையும் வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
அத்துடன், பயணம் செய்யத் திட்டமிடும் மக்கள், வானிலை எச்சரிக்கைகளை கவனித்து அதன்படி பயணத்தை திட்டமிடுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |