கணவனால் 224 துண்டுகளாக வெட்டப்பட்ட மனைவி! பிரித்தானியருக்கு வழங்கப்பட்ட தண்டனை
பிரித்தானியாவில் 2023 மார்ச் மாதம் ஹாலி பிராம்லி என்ற இளம் பெண்ணின் உயிரை பறித்த கணவர் நிக்கோலஸ் மெட்ஸனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் மனைவிக்கு நடந்த பயங்கரம்
பிரித்தானியாவின் லிங்கன்(Lincoln) நகரில் உள்ள தங்கள் இல்லத்தில் மனைவி ஹோலி பிராம்லியைக்(Holly Bramley) 2023ம் ஆண்டு மார்ச் மாதம் கணவர் நிக்கோலஸ் மெட்சன்(Nicholas Metson) கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மனித இயல்பை மீறிய கொடூர செயலில் ஈடுபட்ட அவர், ஹோலியின் உடலை 224 துண்டுகளாக மெட்சன் வெட்டியுள்ளார்.
பின்னர் அந்த உடல் பாகங்களை அப்புறப்படுத்த முயன்று நண்பர் ஒருவருக்கு £50 பணம் கொடுத்து அவற்றை ஆற்றில் வீச வைத்துள்ளார்.
மனைவி ஹோலியின் திடீர் மறைவு குறித்து பொலிஸார் நடத்திய விசாரணையின் இறுதியில் கணவர் மீதான சந்தேகம் பொலிஸாருக்கு அதிகரித்துள்ளது.
ஒருவழியாக மனைவி ஹோலி பிராம்லியின் சில உடல் பாகங்கள் மீட்கப்பட்டது, இருப்பினும் ஹோலியின் இதயம் உள்ளிட்ட பல பாகங்கள் இன்றும் மீட்கப்படவில்லை.
தொடக்கத்தில் தனது குற்றத்தை மறுத்த கணவர் மெட்ஸன், பின்னர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதன் மூலம், ஹோலியின் குடும்பத்தினர் நீண்ட விசாரணையின் மன உளைச்சலில் இருந்து தப்பித்தனர். நீதிபதி அவரது செயல்களை "வக்கிரமான மற்றும் காட்டுமிரமானவை" என்று கண்டனம் செய்தார், இது குற்றத்தின் கொடூரத்தை பிரதிபலித்துள்ளது.
ஆயுள் தண்டனை
இந்த கொலை வழக்கின் கொடூரத்தன்மை காரணமாக மெட்ஸனுக்கு குறைந்தபட்சம் 19 ஆண்டுகள் மற்றும் 316 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நிக்கோலஸ் மெட்சன் குற்றத்தை மறைக்க உதவி செய்த நண்பர் ஹான்காக்-கிற்கு மொத்தம் மூன்று ஆண்டுகள் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Nicholas Metson murder case,
Holly Bramley murder,
Lincoln wife murder,
Dismemberment murder UK,
Husband kills wife UK,