மனைவியை ஸ்க்ரூடிரைவரால் 41 முறை குத்திக் கொன்ற கணவன்: ஹோட்டல் அறையில் நடந்த பயங்கரம்
துருக்கியில் கணவர் ஒருவர் தன்னுடைய மனைவியை ஸ்க்ரூடிரைவரால் 41 முறை குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியை கொன்ற கணவன்
நவம்பர் 11ம் திகதி பிரித்தானியாவில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு வந்த தம்பதி ஒருவர் ஃபாத்திஹ் மேவ்லனாகாபி நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர்.
அப்போது கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஆத்திரமடைந்த கணவன் மனைவியின் அருகில் இருந்த ஸ்க்ரூடிரைவரை எடுத்து மனைவியை 41 முறை குத்திக் கொன்றுள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு அறைக்கு வந்து ஹோட்டல் ஊழியர்கள் பார்த்த போது, பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், ஆனால் அந்த பெண் பின்னர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார்.
இதற்கிடையில் ஹோட்டல் அறையில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற கணவரை ஹோட்டல் ஊழியர்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
பொலிஸார் விசாரணை
இதனை தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசாரணையில், மனைவி தன்னை போதைப் பொருள் எடுத்துக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியதாகவும், தனக்கு உளவியல் பிரச்சினை இருப்பதாகவும் கணவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஹோட்டல் அறையில் பொலிஸார் சோதனை நடத்தியதில், எந்தவொரு போதைப் பொருட்களும் கிடைக்கவில்லை.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கணவன், மனைவிக்கு 22 வயது முதல் 25 வயது இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |