தாலிபான்களின் இந்த வெற்றி பிரித்தானியாவிக்கு மிகப் பெரும் ஆபத்து! எச்சரிக்கும் பாதுகாப்பு நிபுணர்கள்
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதால், இது பிரித்தானியாவின் ஆபாத்து என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கிடத்தட்ட அனைத்து நகரங்களையும் கைப்பற்றிவிட்ட தாலிபான்கள், அங்கு இன்னும் சில நாட்களில் எப்படிப்பட்ட ஆட்சி அமையும் என்ற அறிவிப்பை வெளியிடவுள்ளனர்.
அதற்குள் எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்று அங்கிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில், தாலிபான்களின் இந்த வெற்றி, பிரித்தானியாவுக்கு ஆபத்து என்று பாதுகாப்பு நிபுணர்களால் எச்சரிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்குதலுக்கான சதித்திட்டத்தை ஒசாமா பின்லேடன் தீட்டிய போது, பயங்கரவாத குழு ஆப்கானிஸ்தானில் இருக்கும் பாலைவனங்கள் மற்றும் இடங்களில் ரகசியமாக இருந்து வந்தனர்.
ஆப்கானிஸ்தானின் இராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களின் கட்டுப்பாட்டைக் கொண்ட தாலிபான் குழு, அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல்(9/11) முன்னும் பின்னும் அல் கொய்தாவை விருந்தினர்களாக ஆப்கானிஸ்தானில் தங்க அனுமதி அளித்தது.
இப்போது பல்வேறு புலனாய்வாளர்கள், ஆப்கானிஸ்தான் மீண்டும் பயங்கரவாதக் குழுவுக்கு பாதுகாப்பான புகலிடமாக மாறும் என்று அஞ்சுகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய முன்னாள் பிரித்தானியா இராணுவத் தளபதி Colonel Richard Kemp, பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதல் போன்று, மீண்டும் அமெரிக்காவில் இருக்கும் அராசங்க கட்டிடங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்றவை தாக்கப்பட வாய்ப்புள்ளது.
அப்படி அமெரிக்காவை தாக்க முடியாவிட்டால், அடுத்த இலக்கு பிரித்தானியாவாகத் தான் இருக்கும் என்று எச்சரித்துள்ளார். இதையே ஆப்கானிஸ்தானின் தேசிய எதிர்ப்பு முன்னணியின் சாண்ட்ஹர்ஸ்ட் படித்த தளபதியான Ahmad Masood எச்சரித்துள்ளார்.
மேலும், அவர் தாலிபான்களின் சமீபத்திய வெற்றி ஜனநாயகத்திற்கு எதிரான சதித்திட்டங்கள் மீண்டும் உருவாக்குவதற்கான வாய்ப்பு என்று கூறியுள்ளார்.