வாக்னர் கூலிப்படையின் அசுர வளர்ச்சிக்கு காரணம் பிரித்தானியா: எம்.பி.க்கள் பரபரப்பு குற்றச்சாட்டு
ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையின் அசுர வளர்ச்சிக்கு பிரித்தானியா பத்தாண்டுகளாக முன்னெடுக்க தவறிய நடவடிக்கையே காரணம் என எம்.பி.க்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பிரித்தானியாவில் தடை செய்ய வேண்டும்
இதனால், தற்போது வாக்னர் கூலிப்படை தங்களது விஷக் கொடுக்கை ஆப்பிரிக்க நாடுகளிலும், எளிதில் பாதிக்கப்படக் கூடிய நாடுகளிலும் ஆழமாக பதித்துள்ளதாக பகீர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
வாக்னர் கூலைப்படையை பிரித்தானியாவில் தடை செய்ய அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும், லண்டனை அவர்களின் நிதி திரட்டும் மையமாக முன்னெடுப்பதை தடுக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் சுடிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், வாக்னர் கூலிப்படையின் முக்கிய தலைவர்கள் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுத்துள்ள தடை போன்று பிரித்தானியாவும் நடவடிக்கை எடுத்துள்ளது பாராட்டுக்குரியது என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுமின்றி, வாக்னர் தொடர்புடைய 49 பேர்களின் பட்டியலை வெளியிட்டு, அரசாங்கம் விரிவான விசாரணை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். ரஷ்யாவுக்காக மட்டும் வாக்னர் கூலிப்படை பணியாற்றவில்லை என குறிப்பிட்டுள்ள அறிக்கையில்,
வாக்னர் கூலிப்படையை கண்டுகொள்ளவில்லை
லிபியா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிர அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளிலும் வாக்னர் கூலிப்படை பணியாற்றி வருகிறது. பிரித்தானிய வெளிவிவகாரத்துறையின் சிறப்பு தேர்வுக் குழு சமர்ப்பித்துள்ள இந்த அறிக்கையில். சுமார் பத்தாண்டுகளாக வாக்னர் கூலிப்படையை பிரித்தானிய அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.
@AFP
மட்டுமின்றி, வாக்னர் கூலிப்படையை எதிர்கொள்ளும் பொருட்டு என்ன நடவடிக்கைகள் முன்னெடுக்க இருக்கிறோம் என்பது தொடர்பிலும் அரசாங்கம் எந்த தரவுகளையும் தங்களிடம் ஒப்படைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
யெவ்ஜெனி பிரிகோஜின் தலைமையிலான வாக்னர் கூலிப்படை, உக்ரைனில் நடக்கும் போரில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த நிலையில் ஜூன் மாதம், ரஷ்ய ராணுவத் தலைமைக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சியை முன்னெடுத்து, அது தோல்வியில் முடிந்தது.
இதனையடுத்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் வாக்னர் கூலிப்படையின் யெவ்ஜெனி பிரிகோஜினுக்கும் இடையே மோதல் போக்கு இருப்பதாகவே கூறப்படுகிரது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |