இந்தியாவுக்குள் நுழைந்த இந்திய வம்சாவளி பிரித்தானியப் பெண் கைது
விசா இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்த இந்திய வம்சாவளியினரான பிரித்தானிய பெண் மருத்துவர் ஒருவரும் அவரது சக மருத்துவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
பின்னணி
பிரித்தானியாவின் Gloucesterஐச் சேர்ந்த ஷகில் சுமித்ராவும் (Shakil Sumithra, 61), அவரது சக மருத்துவரான, மான்செஸ்டரைச் சேர்ந்த ஹசன் சலீம் (Hassan Saleem, 35) என்பவரும், தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் மருத்துவ முகாம் ஒன்றிற்காக நேபாளத்துக்கு சென்றுள்ளனர்.

செவித்திறன் தொடர்பிலான மருத்துவத்துறை நிபுணர்களான இருவரும், நேற்று ஞாயிற்றுக்கிழமை, பணியின் இடையே ஓய்வு நேரம் கிடைத்தபோது, தங்கள் குழுவினரிடம் கூறாமல், எல்லை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர்.
பிரித்தானியா அறிவிக்கவுள்ள புதிய புகலிட கொள்கை., குடியுரிமைக்கு விண்ணப்பிக்க 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்
நேபாள பொலிசார் எச்சரிக்கையையும் மீறி அவர்கள் இந்திய எல்லைக்குள் கால் வைத்த நிலையில், அவர்களிடம் முறையான விசா இல்லாததால் இந்திய பொலிசார் அவர்களை கைது செய்துள்ளனர்.
சுமித்ரா எப்படியாவது இந்திய எல்லைக்குள் கால் வைத்தே தீரவேண்டும் என்னும் ஆர்வத்தில் இந்தியாவுக்குள் நுழைந்ததாகவும், பொலிசார் அவர்களிடம் எதற்காக அனுமதியின்றி இந்தியாவுக்குள் நுழைந்தீர்கள் என கேட்டபோது, திருப்திகரமான பதில் எதையும் அவரால் கூற இயலவில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சுவித்ராவுடன் இந்திய எல்லைக்குள் நுழைந்த சலீம் பாகிஸ்தான் வம்சாவளியினராவார்.
இந்திய பாஸ்போர்ட் சட்டம் 1967இன் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இருவரும் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |