G7 நாடுகளில் அதிக பணவீக்கத்தை சந்திக்கவுள்ள பிரித்தானியா - IMF எச்சரிக்கை
G7 நாடுகளில் அதிக பணவீக்கத்தை பிரித்தானியா சந்திக்கவுள்ளதாக IMF எச்சரித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்ட உலக பொருளாதார அவுட்லுக் அறிக்கையின் படி, பிரித்தானியா 2025 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளில் G7 நாடுகளில் அதிக பணவீக்கத்தை சந்திக்கவுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பிரித்தானியாவில் பணவீக்கம் சராசரியாக 3.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய 3.2 சதவீத மதிப்பேட்டைக் கட்டிலும் அதிகம்.
2026-ல் இது 2.5 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
IMF வல்லுநர்கள், பிரித்தானிய அரசாங்க பத்திரங்களில் வட்டி விகிதங்கள் அதிகரிப்பதற்கு ஒட்டும் பணவீக்கத்தை (Sticky Inflamation) முக்கிய காரணமாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
சந்தைகள் பிரித்தானிய பொருளாதார நிலைமையைப் பற்றி கவலை கொண்டுள்ளதாகவும், அதிக ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதாகவும் கூறியுள்ளனர்.
பணவீக்கத்தின் முக்கிய காரணிகள் தற்காலிகமானவை என IMF தலைமை பொருளாதார நிபுணர் Pierre-Olivier Gourinchas தெரிவித்துள்ளார்.
தண்ணீர் கட்டணங்கள், ரயில் காட்டன் உயர்வுகள் போன்றவை பணவீக்கத்தை தூண்டியுள்ளன.
ஆனால் எதிர்பார்த்ததைவிட அதிகமாக ஊதியங்கள் உயர்வதும், பணவீக்கம் குறையும் என்ற நம்பிக்கையில் வீழ்ச்சி ஏற்படுவதும் ஆபத்தாக இருக்கலாம் என அவர் எச்சரித்துள்ளார்.
பிரித்தானியாவின் வளர்ச்சி விகிதம் 2025-ல் 1.3 சதவீதமாக உயர்ந்தாலும், 2026-ல் 1.3 சதவீதமாகவே குறையும். G7 நாடுகளில் அமெரிக்காவிற்கு பிறகு பிரித்தானியா இரண்டாவது வேகமாக வளரும் பொருளாதாரமாக இருக்கும் என IMF கணிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK inflation 2025, IMF UK economic outlook, G7 inflation comparison, Bank of England interest rates, UK consumer price index, UK wage growth impact, UK monetary policy 2025, IMF inflation forecast, UK economy news, UK budget and inflation