பிரித்தானியாவில் ஆபத்தான அறுவை சிகிச்சையில் உயிரிழந்த இன்ஃப்ளூயன்சர்
UK influencer dies in risky surgery: பிரித்தானியாவில் ஆபத்தான அறுவை சிகிச்சையில் பிரபல இன்ஃப்ளூயன்சர் உயிரிழந்தார்.
பிறப்புறுப்பை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை
பிரித்தானியாவில் வசிக்கும் நைஜீரிய வம்சாவளி வணிகரும் சமூக ஊடக இன்ஃப்ளூயன்சருமான Dennis "Tiny" Ubiribo (43), விடுமுறைக்கு தாய்லாந்து சென்றபோது தனது பிறப்புறுப்பை பெரிதாக்கும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.
ஆனால், அந்தச் சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட சிக்கல்களால் அவர் உயிரிழந்தார்.
இருமுறை மயங்கி விழுந்தார்
அவருக்கு புல்மனரி எம்பொலிசம் (நுரையீரல் இரத்தக் குழாய்களில் அடைப்பு) ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு மனைவியுடன் இருந்தபோது மார்பு வலி ஏற்பட்டதுடன், இருமுறை மயங்கி விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், அவரது உடலில் 40 மில்லி லீற்றர் ஹயாலுரோனிக் ஆசிட் மற்றும் லிடோகெயின் செலுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிறப்புறுப்பை (Penis) பெரிதாக்கும் சிகிச்சை பொதுவாக நீளம் அதிகரித்தல் அல்லது அகலம் (girth) அதிகரித்தல் ஆகிய முறைகளில் செய்யப்படுகிறது. சிலர் வயிற்றுப் பகுதியில் கொழுப்பு குறைக்கும் லிபோசக்ஷன் மூலம், பீனிஸ் பெரியதாகத் தோன்றும் வகையில் சிகிச்சை மேற்கொள்கிறார்கள். மருத்துவ ரீதியாக, மைக்ரோ பீனிஸ் அல்லது புரியப்பட்ட பீனிஸ் போன்ற நிலைகளில் சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.
ஆனால், பலர் அழகியல் காரணங்களுக்காக அல்லது உடல் தோற்றம் குறித்த மனஅழுத்தத்தால் இந்தச் சிகிச்சையை செய்கிறார்கள்.
British-Nigerian influencer and businessman Igho ‘Tiny’ Ubiribo, died after a penis enlargement procedure in Thailand went wrong.
— Complex (@Complex) September 5, 2026
He was later laid to rest in London in a gold coffin reportedly worth $745,000.
[📸: via/ Ego2222, FB pic.twitter.com/5JHoCGLGU9
கடுமையான பின்விளைவுகள் - எச்சரிக்கை
அமெரிக்க யூராலஜி சங்கம் (AUA) இந்த elective surgery-ஐ பாதுகாப்பற்றதும், மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படாததும் எனக் கருதுகிறது. 2018-ஆம் ஆண்டு வெளியான ஆய்வில், இத்தகைய சிகிச்சைகள் தொற்று, திசு சேதம், நரம்பு பாதிப்பு, பாலியல் செயல்பாட்டில் குறைபாடு போன்ற கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |