'இனி தேசிய அடையாள அட்டைகள் செல்லுபடியாகாது' பிரித்தானிய அரசு அதிரடி நடவடிக்கை!
பிரித்தானியாவில் இனி முறையான கடவுச்சீட்டுகளைத் தவிர, மற்ற அடையாள அட்டைகள் பயண ஆவணங்களாக ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரித்தானிய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூரவ அறிக்கையில், அக்டோபர் 1 முதல், பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், EEA (ஐரோப்பிய பொருளாதார பகுதி) நாடுகள் மற்றும் சுவிஸ் குடிமக்களிடமிருந்து பாதுகாப்பற்ற தேசிய அடையாள அட்டைகளை பிரித்தானிய எல்லைப் படை ஏற்றுக்கொள்வதை நிறுத்துகிறது.
பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றியம், EEA மற்றும் சுவிஸ் குடிமக்கள் பிரிட்டனில் நுழைவதற்கு, உரிய செல்லுபடியாகும் கடவுச்சீட்டு தேவைப்படும்.
From today, most ID cards will no longer be accepted as a valid travel document to enter the UK. The removal of ID cards will strengthen our borders and help to deter those who seek to abuse the system.
— Home Office (@ukhomeoffice) October 1, 2021
➡️ https://t.co/8zA8PXL92E pic.twitter.com/9vDUylq5HY
ஏனெனில் "எல்லைப் படை அதிகாரிகளால் பார்க்கப்பட்ட மிக மோசமான ஆவணங்கள் மற்றும் கடந்த ஆண்டு, எல்லையில் கண்டறியப்பட்ட அனைத்து பொய்யான ஆவணங்களில் கிட்டத்தட்ட பாதி ஐரோப்பிய ஒன்றியம், EEA அல்லது சுவிஸ் அடையாள அட்டைகள் தான்" என்று பிரித்தானிய அரசாங்கம் கூறியது.
இதுகுறித்து உள்துறை செயலாளர் பிரீத்தி பட்டேல் (Priti Patel) கூறியதாவது: "பிரித்தானியாவில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய விரும்பும் குற்றவாளிகளை கட்டுப்படுத்த வேண்டும்.
பாதுகாப்பற்ற அடையாள அட்டைகளைப் பயன்படுத்துவதை நிறுத்துவதன் மூலம் நாங்கள் எங்கள் எல்லையை வலுப்படுத்துகிறோம் மற்றும் எங்கள் குடியேற்ற முறையின் கட்டுப்பாட்டை திரும்பப் பெற மக்களின் முன்னுரிமையை வழங்குகிறோம்.
Picture: Getty Images
குடியேற்றத்திற்கான எங்கள் புதிய திட்டத்தின் ஒரு பகுதியாக நாங்கள் இதைச் செய்கிறோம்.
இது துஷ்பிரயோகம் செய்ய விரும்புவோர் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கும், மேலும் விதிகளை கடைப்பிடிப்பவர்களுக்கு நியாயமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.