சீனாவுக்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்த்தது பிரித்தானியா!
கொரோனா வைரஸ் உருவானது குறித்து விசாரிக்கும் அமெரிக்காவுக்கு பிரித்தானியா உளவுத்துறை உதவுவதாக Telegraph செய்தி வெளியிட்டுள்ளது.
Telegraph-யின் படி, சீனாவின் வுஹான் நகரில் உள்ள ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்ததா என்பது குறித்த அமெரிக்க விசாரணைக்கு பிரித்தானியா உளவுத்துறை உதவுதாக தெரிவித்துள்ளது.
கொரோனாவின் தோற்றும் குறித்து பிரித்தானியா உளவுத்துறை அமைப்பு தன்னிச்சையாக விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விவகாரத்தில் பிரித்தானியாவின் தற்போதைய அதிகாரப்பூ நிலைப்பாடு என்னவென்றால், கசிவு குறித்த விசாரணையை தொடர வேண்டும் என்பதாகும்.
கொரோனா தோற்றம் தொடர்பான விாசரணைக்கு ஹவானில் எங்களுக்கு உள்ள உளவுத்துறையை நாங்கள் பயன்படுத்துகிறோம். அத்துடன் அமெரிக்கர்களுக்கு உதவுவோம் என மூத்த Whitehall அதிகாரி ஒருவர் கூறியதாக மேற்கோள்காட்டி Telegraph செய்தி வெளியிட்டுள்ளது.