புடினை எதிர்த்து நிற்க பிரித்தானியாவின் புதிய கண்டுபிடிப்பு: எதிரியின் கண்களை மறைக்கும் ட்ரோன்கள்
பிரித்தானியா, புடினை எதிர்த்து நிற்கும் வகையில், எதிரியின் கண்களை மறைக்கும் ட்ரோன் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.
எதிரியின் கண்களை மறைக்கும் ட்ரோன்கள்
பிரித்தானிய வல்லுநர்கள், StormShroud drones என்னும், போரில் பயன்படுத்தப்படும் புதியவகை ட்ரோன் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
இந்த ட்ரோன்கள், Typhoon மற்றும் F35 Lightning போன்ற போர் விமானங்களுக்கு முன்னே பயணிக்கும்.
செயற்கை தொழில் நுட்பத்தால் இயங்கும் இந்த ட்ரோன்கள், ஜாமர்கள் மூலம் எதிரியின் ரேடாரைக் குழப்பி, வான் பாதுகாப்பு ஏவுகணைகளுக்கு வழியை ஏற்படுத்திக் கொடுக்கும்.
எதிரியின் கண்களில் அவை படாது என்பதால், எதிரியை தாக்க வழி உருவாக்கிக் கொடுப்பதுடன், பிரித்தானிய போர் விமானங்களையும் அவை பாதுகாக்கும்.
விடயம் என்னவென்றால், அவை ஏற்கனவே உக்ரைனில் ரஷ்யாவுக்கெதிராக பயன்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டும் ஆயிற்று.
மேலும், இந்த ட்ரோன்கள் சில வேலைகளைப் பொறுப்பெடுத்துக்கொள்வதால், அந்த வேலைகளுக்கு ராணுவ வீரர்களை அனுப்பவும் தேவையில்லை என்பதால், ராணுவ வீரர்களை வேறு முக்கிய பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது ஒரு கூடுதல் நன்மையாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |