செப்டம்பர் 28 முதல் ஜேர்மனியில் கார் ஓட்டும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி
பிரெக்சிட் மாற்றக்காலத்தைத் தொடர்ந்து ஜேர்மனிக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் பயணங்கள் தொடர்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை ஜேர்மனியில் அல்லது ஏதாவது ஒரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டில் பயன்படுத்துவதில் ஒரு முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது.
அதன்படி, செப்டம்பர் 28 முதல் பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை ஜேர்மனியில் பயன்படுத்தவேண்டுமானால், ‘UK' ஸ்டிக்கர் ஒன்றை வாகனங்களில் ஒட்டியிருக்கவேண்டும் என்ற புதிய விதி ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதற்கு முன் ‘GB’ என்ற ஸ்டிக்கர் பயன்படுத்தப்பட்ட நிலையில், அதை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக இனி ‘UK' என்ற ஸ்டிக்கரை பயன்படுத்தவேண்டும் என பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.