தொழில்நுட்ப வளர்ச்சிக்கு 55 பில்லியன் பவுண்டு., பிரித்தானியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க முதலீடு
பிரித்தானிய அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்காக 55 பில்லியன் பவுண்டு நிதியை ஒதுக்கியுள்ளது.
இது Department for Science, Innovation and Technology (DSIT) மூலம் மேற்கொள்ளப்படும் மிகப்பாரிய Research and Development முதலீடாகும்.
2029/2030 வரை நீடிக்கும் இந்த நிதி திட்டம், ஆராய்ச்சியாளர்களுக்கு நிலைத்தன்மை மற்றும் தெளிவை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி, சுகாதாரம், சுத்த ஆற்றல், செயற்கை நுண்ணறிவு, quantum computing உள்ளிட்ட துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், பொருளாதார வளர்ச்சியை தூண்டவும் பயன்படுத்தப்படவுள்ளது.

ஒவ்வொரு 1 பவுண்டு அரசு முதலீட்டுக்கும் 8 பவுண்டு பொருளாதார பலன்கள் கிடைக்கும் என அரசு மதிப்பீடு செய்துள்ளது.
UK Research and Innovation (UKRI) நிறுவனத்திற்கு அதிகபட்ச நிதி வழங்கப்படுகிறது. 2029/2030க்குள் அதன் ஆண்டு பட்ஜெட் 10 பில்லியன் பவுண்டுகளை எட்டும்.
ARIA எனப்படும் Advanced Research and Invention Agency-க்கு 400 மில்லியன் பவுண்டு வரை நிதி உயர்த்தப்படுகிறது.
மேலும், Met Office, National Academies, National Measurement System, AI Security Institute ஆகியவற்றுக்கும் பெரும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியால், தொழில்துறையில் வேலைவாய்ப்புகள் 21 சதவீதம் அதிகரிக்கும், வருமானம் 23 சதவீதம் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
BioNTech, Oxford Nanopore, Cobalt Light Systems போன்ற நிறுவனங்கள் இதற்கான உதாரணமாகும். இந்த திட்டம், பிரித்தானியாவின் அறிவியல் மேம்பாட்டில் ஒரு முக்கிய கட்டமாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK science funding 2025, £55 billion UK tech investment, UKRI research budget increase, UK innovation breakthroughs, ARIA funding UK government, UK R&D spending 2025, UK technology strategy, UK green energy research, AI quantum UK investment, UK science and tech policy