மூன்றாவது அலையில் பிரித்தானியா... திடுக்கிட வைக்கும் தகவலை வெளியிட்ட முக்கிய நிபுணர்கள்
பிரித்தானியாவில் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டுள்ளதால், ஜூன் 21ல் கட்டுப்பாடுகளை நீக்கும் நடவடிக்கைகள் மேலும் தாமதமாகலாம் என அரசுக்கான முக்கிய ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் மூன்றாவது அலை ஏற்பட்டுள்ளது என்பதை அரசுக்கான முக்கிய ஆலோசகர்கள் உறுதி செய்துள்ளனர்.
மட்டுமின்றி, இந்திய மாறுபாடு பரவல் தொடர்பில் அமைச்சர்களுக்கு தெளிவான புரிதல் வேண்டும் எனவும், அது ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு ஏற்படுத்துவதற்கான முடிவெடுப்பதில் உதவும் என முக்கிய ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, தற்போது நாட்டில் மூன்றாவது அலை ஏற்பட்டுள்ளதால், ஜூன் 21ல் முன்னெடுக்கவிருந்த தளர்வுகள் இன்னும் சில வாரங்கள் தாமதமாகலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதிகரித்துவரும் இந்திய மாறுபாடு பாதிப்பு எண்ணிக்கை தற்போதைய சூழலில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசுக்கான ஆலோசகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கு முன்னர் ஊரடங்கை அமுலுக்கு கொண்டுவருவதில் நாம் தாமதித்தோம், உரிய முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் நாம் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானோம்,
மட்டுமின்றி பல ஆயிரம் உயிர்களை பலி கொடுத்தோம்.
ஆனால் இந்த முறை எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும், பொறுமையுடன் கண்காணித்து, அதன் பின்னரே தளர்வுகள் ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர் முக்கிய ஆலோசகர்கள்.