லண்டனை உலுக்கிய இரட்டை கொலை சம்பவம்: 2 பேர் அதிரடியாக கைது
பிரித்தானியாவின் வடக்கு லண்டன் பகுதியில் நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரட்டை கொலை
வடக்கு லண்டனின் இஸ்லிங்டன் பகுதியில் 15 வயது சிறுவன் மற்றும் 23 வயது இளைஞர் என இருவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இரண்டு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து வியாழக்கிழமை இரவு 11:30 மணியளவில் இஸ்லிங்டன் உள்ள எல்தோர்ன் சாலை படுகாயங்களுடன் 15 வயது சிறுவன் லியோனார்டோ ரீட் கண்டெடுக்கபட்டான், ஆனால் துரதிஷ்டவசமாக சிறுவன் சிறிது நேரத்திலேயே உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார்.
. Pic: Met Police
அத்துடன் அதே நாள் இரவு 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் பார்க்கப்பட்ட நிலையில், அவரும் வெஸ்ட் லண்டன் மருத்துவமனையில் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டார்.
இந்த இரட்டை கொலை சம்பவத்தில் முதலில், 46 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்து இருந்தனர், ஆனால் விசாரணைக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளிக்கிழமை பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில், தாக்குதல் சம்பவம் நடைபெற்ற இடத்தில் நிறைய மக்கள் இருந்ததாக நம்பப்படுகிறது, எனவே வன்முறை சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
PA
இரண்டு பேர் கைது
இந்நிலையில் 15 வயது சிறுவன் லியோனார்டோ ரீட் மற்றும் 23 வயது இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தில் 27 மற்றும் 17 வயதுடைய இரண்டு பேர் கொலை மற்றும் கொலை முயற்சி ஆகியவற்றின் கீழ் திங்கட்கிழமை மாலை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் தற்போது வடக்கு லண்டன் காவல் நிலையத்தில் விசாரணைக்காக காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |