17 இடங்களில் வாழும் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆராய்ச்சிமையம்
பிரித்தானியாவில் 17 இடங்களில் வாழும் மக்களுக்கு பெருவெள்ளம் தொடர்பில் வானிலை ஆராய்ச்சிமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெருவெள்ள எச்சரிக்கை

அடுத்த சில நாட்களில் நீர்நீலைகளின் கரைகள் உடையும் அளவுக்கு பெருவெள்ளம் ஏற்பட இருப்பதால், நீர்நிலைகளுக்கு அருகில் வாழும் மக்கள், டார்ச், பேட்டரிகள், மொபைல் போன் பவர் பேக் ஆகியவற்றை ஒரு அவசர கால தேவைகளுக்காக தயாராக வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
இங்கிலாந்தின் தென்மேற்கு பகுதிகள் மற்றும் வேல்ஸ் நாட்டில், இன்று கனமழை வெளுத்துவாங்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாலேயே இந்த எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

வேல்ஸ் நாட்டுக்கு ஒன்பது எச்சரிக்கைகள், இங்கிலாந்துக்கு ஏழு எச்சரிக்கைகள் மற்றும் ஸ்கொட்லாந்துக்கு ஒரு எச்சரிக்கை என மொத்தம் 17 இடங்களுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் பெருவெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |