புலம்பெயர்வோர் பயணிக்கும் பிரம்மாண்ட படகை இயக்கிய நபருக்கு சிறை
UK jails teen asylum seeker for steering overcrowded Channel migrant boat: பிரம்மாண்ட புலம்பெயர்வோர் படகொன்றை இயக்கிய நபருக்கு பிரித்தானியாவில் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா சட்டவிரோத புலம்பெயர்தலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்துவருவது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், பிரம்மாண்ட புலம்பெயர்வோர் படகொன்றை இயக்கிய இளைஞர் ஒருவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்ட படகை இயக்கிய நபருக்கு சிறை
பிரான்சிலிருந்து புலம்பெயர்வோர் ஆங்கிலக்கால்வாய் வழியாக சிறு ரப்பர் படகுகளில் பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சிகள் நாடாளுமன்றம் வரை ஒலித்துவரும் நிலையில், ‘சிறுபடகுகள்’ என்னும் பதம் ஊடகங்களில் முக்கிய இடம்பெற்றுவந்தது.

அரசியல்வாதிகள், சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரால் பெரும் தொல்லை என்னும் ரீதியில் முழங்கிக்கொண்டிருக்க, அதை கேலிக்கூத்தாக்குவதுபோல, சிறு படகுகள் இல்லை, பெரிய படகுகள் மூலம் புலம்பெயர்வோரை அனுப்பத் துவங்கினார்கள் ஆட்கடத்தல்காரர்கள்.
ஆக, இந்த பிரம்மாண்ட படகுகளால் அரசுக்கு புதிய தலைவலி துவங்கிய நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த ஆண்டு, அதாவது, 2026ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், புதிய சட்டம் ஒன்றை இயற்றியது பிரித்தானியா.
அதன்படி, படகுகள் மூலம் புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் நிலையில், அந்த படகுகளை இயக்குவோருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
இந்நிலையில், சமீபத்தில் 165 புலம்பெயர்ந்தோரை பிரித்தானியாவுக்கு கொண்டுவர முயன்ற பிரம்மாண்ட படகொன்றை மடக்கிப் பிடித்தனர் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள்.
அந்த படகை இயக்கிய சூடான் நாட்டைச் சேர்ந்த Chan Mathok Atak (19) என்னும் இளைஞருக்கு நேற்று கேன்டர்பரி க்ரௌன் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

Chanக்கு இரண்டு ஆண்டுகள் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தண்டனைக்காலம் முடிவடைந்ததும், அவர் தன் சொந்த நாட்டுக்கு நாடுகடத்தப்படவும் வாய்ப்புள்ளதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
Chan இயக்கிய படகில் 31 சிறுவர்கள் உட்பட 165 புலம்பெயர்ந்தோருடன் பயணித்த நிலையில், அந்த படகில் பாதுகாப்பு உடைகளோ, உபகரணங்களோ, முதலுதவி சிகிச்சைக்கான மருந்துகளோ இல்லை.
அத்துடன், ஒரே ஒரு சிறிய இயந்திரத்தின் உதவியுடன், 165 புலம்பெயர்ந்தோருடன் நகர முடியாமல், மெல்ல நகர்ந்துகொண்டிருந்தது அந்தப் படகு.
ஆக, அத்தனை உயிர்களை ஆபத்தான வகையில் ஆங்கிலக்கால்வாயில் பயணிக்கவைத்ததற்காக, அந்த படகை இயக்கியதாக கருதப்படும் Chan கைது செய்யப்பட்டு அவருக்கு சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.