புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் ஒப்பந்தம்: கவலையை ஏற்படுத்தியுள்ள ஒரு தகவல்
பிரித்தானியாவும் 45 ஐரோப்பிய நாடுகளும், புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்துவது தொடர்பான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த விடயம், மனித உரிமைகள் அமைப்புகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் ஒப்பந்தம்
Council of Europe என்னும் அமைப்பின் உறுப்பு நாடுகளான பிரித்தானியாவும் 45 ஐரோப்பிய நாடுகளும், புகலிடக்கோரிக்கையாளர்களை மூன்றாம் நாடுகள் என அழைக்கப்படும் நாடுகளுக்கு நாடுகடத்துவது தொடர்பான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

விடயம் என்னவென்றால், ஐரோப்பிய மனித உரிமைகள் ஒப்பந்தத்தின் 3 மற்றும் 8ஆவது பிரிவுகள், உடல்ரீதியான வன்முறை, உளவியல் ரீதியான அதிர்ச்சி, மிகவும் மோசமான சிறை நிலைமைகள், மற்றும் சித்திரவதைக்கு உள்ளாகும் உண்மையான அபாயத்தை எதிர்கொள்ளும் ஒரு நாட்டிற்கு தனிநபர்களை வெளியேற்றுவதற்கோ அல்லது நாடு கடத்துவதற்கோ தடை விதிக்கும் வகையில் அமைந்துள்ளன.
ஆனால், இந்த பிரிவுகளைப் பயன்படுத்தி, பிரித்தானியாவில் வாழ தகுதியற்ற புகலிடக்கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்படுவதை மனித உரிமை அமைப்புகள் தடுப்பதாக பிரித்தானிய அதிகாரிகள் நம்புகிறார்கள்.
ஆக, இந்த புதிய ஒப்பந்தம், சொல்லப்போனால், அப்படி புகலிடக்கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்படும் விடயத்தில் நீதிமன்றங்கள் தலையிடுவதைக் கூட கட்டுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது எனலாம்.
ஆகவேதான் இந்த ஒப்பந்தம் மனித உரிமை அமைப்புகளை கவலையடையச் செய்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |