பிரித்தானிய ஊடகவியலாளரை மோசமாக அவமதித்த அமெரிக்க அரசியல்வாதி: ஒரு அதிர்ச்சி வீடியோ
அமெரிக்க ராணுவ ரகசியம் ஒன்று லீக் ஆன விடயம் அமெரிக்காவை அவமானத்துக்குள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில், அது குறித்து பிரித்தானிய ஊடகவியலாளர் ஒருவர் அமெரிக்க அரசியல்வாதி ஒருவரிடம் கேள்வி எழுப்ப, அந்த ஊடகவியலாளரை மோசமாகப் பேசி அவமதித்துவிட்டார் அந்த அரசியல்வாதி.
பிரித்தானிய ஊடகவியலாளரை அவமதித்த அமெரிக்க அரசியல்வாதி
Reporter: "Should the Defense Secretary.."
— Republicans against Trump (@RpsAgainstTrump) March 26, 2025
Marjorie Taylor Greene: what country are you from?
Reporter: From the UK
MTG: “OK we don't give a crap about your opinion and your reporting. Why don't you go back to your country”
MTG is a national disgrace pic.twitter.com/qvvU8QTScw
அமெரிக்க அரசியல்வாதியும், ஜார்ஜியா மாகாணத்தின் 14ஆவது மாவட்ட அமெரிக்க பிரதிநிதியுமான மார்ஜரி டெய்லர் கிரீன் (Marjorie Taylor Greene) ஊடகவியலாளர்களை சந்தித்துக்கொண்டிருந்தார்.
அப்போது, பிரித்தானியாவின் Sky News ஊடகவியலாளரான மார்த்தா கெல்னர் (Martha Kelner), அமெரிக்க ராணுவ ரகசியம் ஒன்று லீக் ஆன விடயம் குறித்து கேள்வி எழுப்பினார்.
உடனே ஆத்திரமடைந்த கிரீன், நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என கேட்க, மார்த்தா, தான் பிரித்தானியாவைச் சேர்ந்தவர் என்று கூற, உங்கள் கருத்துக்கள் குறித்தோ, உங்கள் செய்திகள் குறித்தோ எங்களுக்குக் கவலை இல்லை.
நீங்கள் நாட்டிலேயே பெரிய புலம்பெயர்தல் பிரச்சினை இருக்கிறதே, நீங்கள் ஏன் உங்கள் நாட்டுக்குத் திரும்பிச் செல்லக்கூடாது என கத்திவிட்டார்.
மார்த்தா தொடர்ந்து கேள்வி எழுப்ப, உங்களுக்கு உங்கள் நாட்டு மக்கள் மீது அக்கறை இருக்கிறதா? உங்கள் பெண்கள் எல்லாரும் புலம்பெயர்ந்தோரால் வன்புணரப்படுகிறதைக் குறித்து உங்களுக்குக் கவலை இருக்கிறதா என சரமாரியாக கோபக் கேள்விகள் எழுப்பினார் கிரீன்.
மார்த்தா அதிர்ச்சியில் திகைத்து நிற்க, உங்கள் கேள்விகள் முடிந்தது, உங்கள் போலிச் செய்திகளைக் குறித்து எனக்குக் கவலை இல்லை என்றும் கூறிய கிரீன், அமெரிக்க ஊடகவியலாளர்கள் உங்கள் கேள்விகளைக் கேட்கலாம் என்றும் கூறினார்.
கிரீனின் செயலால் அனைவரும் அதிர்ச்சியடைய, அதைத் தொடர்ந்து அதே விடயம் தொடர்பில் அமெரிக்க ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்ப, அதற்கும் கொந்தளித்துத் தள்ளிவிட்டார் கிரீன்.
அமெரிக்காவை நண்பர் என்கிறார் பிரித்தானிய பிரதமர். ஆனால், அமெரிக்கத் தரப்பு அப்படி நினைக்கவில்லை என்பது தொடர்ந்து வெட்டவெளிச்சமாகிவருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |