நாட்டுக்கு நல்லது நடக்கும் என்றால் மட்டுமே அமெரிக்காவுடன் ஒப்பந்தம்: பிரித்தானிய பிரதமர்
பிரித்தானியாவுக்கு நல்லது நடக்கும் என்றால் மட்டுமே அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவேன் என பிரித்தானிய பிரதமர் கூறியுள்ளார்.
நாட்டுக்கு நல்லது நடக்கும் என்றால் மட்டுமே...
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மானாவாரியாக பல நாடுகள் மீது வரிகள் விதித்துவருகிறார்.
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அமெரிக்கா சென்று ட்ரம்பை சந்தித்த நேரத்தில், இரு நாடுகளும் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டால் பிரித்தானியா மீது வரிகள் விதிக்கவேண்டிய அவசியமே இருக்காது என்று கூறியிருந்தார் ட்ரம்ப்.
ஆனால், பிரித்தானியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவிகித வரியும், கார்களுக்கு 25 சதவிகித வரிகளும் விதித்துவிட்டார்.
இந்நிலையில், ட்ரம்பின் வரிகளால் பிரித்தானிய பொருளாதாரத்தின் மீது ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதற்காக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறது பிரித்தானியா.
என்றாலும், நீட்டின இடத்திலெல்லாம் கையெழுத்து போடப்போவதில்லை, அமெரிக்காவுடன் செய்துகொள்ளவிருக்கும் ஒப்பந்தத்தால் பிரித்தானியாவுக்கு நன்மை ஏற்படும் என்றால் மட்டுமே ஒப்பந்தம் செய்துகொள்வேன் என்று தற்போது கூறியுள்ளார் ஸ்டார்மர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |