மன்னர் சார்லஸ் உருவப்படம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் தயார்: நுட்பமான வடிவமைப்பில் தயாரிப்பு
மன்னர் மூன்றாம் சார்லஸ் உருவப்படம் பொறிக்கப்பட்ட முதல் நாணய தொகுப்பு டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும்.
நாணயத்தின் மறுபக்கம், ராணியின் நினைவாக 1953ம் ஆண்டு முடிசூட்டிக் கொண்ட போது பயன்படுத்தப்பட்ட சின்னங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
மன்னர் மூன்றாம் சார்லஸின் முகம் பதித்த முதல் நாணயங்கள் வேல்ஸ், லான்ட்ரிசான்ட்டில் உள்ள ராயல் மின்ட்டில் அச்சடிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் மிக நீண்ட காலம் ஆட்சி இருந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது மகன் மூன்றாம் சார்லஸ் நாட்டின் புதிய மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
PA MEDIA
இதையடுத்து அவரது மாட்சிமை-யை பறைசாற்றும் வண்ணம் சின்னங்கள் வெளியிடப்பட்டு இருந்த நிலையில், தற்போது வேல்ஸின் லான்ட்ரிசான்ட்டில் உள்ள ராயல் மின்ட்டில் மன்னர் மூன்றாம் சார்லஸின் உருவப்படம் பொறிக்கப்பட்ட 50 பென்ஸ் நாணய தொகுப்பு அச்சடிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாணய மதிப்புகள் டிசம்பர் மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும், அத்துடன் அவை வங்கிகள், தபால் நிலையங்கள் ஆகியவற்றின் தேவைக்கேற்ப விநியோகிக்கப்படும் என்றும், 9.6 மில்லியன் 50 பென்ஸ் நாணயங்கள் வரை அச்சடிக்கப்பட்ட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னர் மூன்றாம் சார்லஸின் உருவப்படம் பொறிக்கப்பட்ட மற்ற மதிப்புள்ள கொண்ட நாணயங்கள் தேவைக்கேற்ப விரைவில் அச்சடிக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.
PA MEDIA
அதே சமயம் இந்த நாணயங்கள் மறைந்த மகாராணி நினைவாக பயன்பாட்டில் உள்ள 27 பில்லியன் நாணயங்களுடன் சேர்த்து பயன்பாட்டில் வரும் என தகவல் தெரியவந்துள்ளது.
இந்த நாணயத்தில் உள்ள மன்னர் மூன்றாம் சார்லஸின் உருவப்படத்தை உருவாக்கிய சிற்பி மார்ட்டின் ஜென்னிங்ஸ், நாணயத்திற்கான மன்னரின் உருவப்படத்தை வடிவமைத்தது மறக்க முடியாத அனுபவம் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதற்காக மன்னர் மூன்றாம் சார்லஸின் 70 பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் நாணயத்தை முதல் முறையாக வடிவமைத்துள்ள ஜென்னிங்ஸ், நிறுவனத்தின் நீடித்த மதிப்புகள் நுண்ணிய வழிகளில் சேர்க்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
PA MEDIA
கூடுதல் செய்திகளுக்கு: ஆரம்பத்தில் இருந்தே இளவரசர் ஹரியிடம் எச்சரிக்கையாக இருந்த ராணி கமீலா!
நாணயத்தின் மறுபக்கம், மறைந்த மகாராணியின் இரண்டாம் எலிசபெத்தின் நினைவாக அவர் 1953ம் ஆண்டு முடிசூட்டிக் கொண்ட போது பயன்படுத்தப்பட்ட சின்னங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
அதில் ஒரு கேடயத்திற்குள் சித்தரிக்கப்பட்டுள்ள அரச ஆயுதங்களின் நான்கு பகுதிகள், ஒவ்வொரு கேடயத்திற்கும் இடையில் சொந்த நாடுகளின் சின்னம் உள்ளது, அவற்றில் ரோஜா, திஸ்டில், ஷாம்ராக் மற்றும் லீக் இடம்பெற்றுள்ளன.