புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ்: நாணயங்கள் முதல் தேசிய கீதம் வரை... பிரித்தானியாவில் நிகழவிருக்கும் மாற்றங்கள்!
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது 96 வயதில் காலமானார்.
பிரித்தானியாவின் புதிய மன்னர் பொறுப்பேற்றதை தொடர்ந்து அரச குடும்பத்தின் நாணயங்கள், முத்திரைகளில் மாற்றம்.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து, அரச குடும்பத்தின் நாணயங்கள், முத்திரைகள் மற்றும் பாரிஸ்டர்கள் என அனைத்து விஷயங்களும் விரைவில் மாற்றங்கள் ஏற்பட உள்ளது.
பிரித்தானியாவின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மகாராணி இரண்டாம் எலிசபெத், 1952ம் ஆண்டு தனது 25 வது வயதில் அரியணை ஏறினார். சுமார் 70 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் இருந்த மகாராணி இரண்டாம் எலிசபெத், தனது 96 வயதில் நேற்று வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
Getty
ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து, பிரித்தானியாவின் ஆட்சி அரியணையில் அவரது மகன் மூன்றாம் சார்லஸ் மன்னராக பதவியேற்கவுள்ளார்.
இந்நிலையில் மகாராணி இரண்டாம் எலிசபெத் மரணத்தை தொடர்ந்து, அரச குடும்பத்தின் பல சின்னச் சின்னப் பொருட்கள், சின்னங்கள் மற்றும் தலைப்புகள் என அனைத்தும் மாற்றமடைய உள்ளது.
அந்த வகையில் இனி அரச குடும்பத்தின் சார்பாக உள்ள நாணயங்கள், முத்திரைகள் மற்றும் பதக்கங்கள் ஆகியவற்றில் மறைந்த ராணியின் தனித்துவமான பக்க சுயவிவரத்தை தாங்காமல், ராணியின் மகன் அதாவது பிரித்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸின் தனித்துவமான சுயவிவரத்தை தாங்கி இருக்கும் என தெரியவந்துள்ளது.
AFP via Getty
இதனடிப்படையில் புதிய மன்னருக்காக புதிய அரச கோடி, நாணயம், மற்றும் பிரித்தானியாவின் தேசிய கீதத்தில் மாற்றம் போன்றவை மாற்றியமைக்கப்பட உள்ளது.
புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்றதை தொடர்ந்து ஏற்படும் மாற்றங்கள்:
மன்னர் சார்லஸின் கையெழுத்து:
பிரித்தானியாவின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்றதில் இருந்து அவரது கையெழுத்துக்கு பின்னால் கூடுதலாக R என்ற எழுத்து சேர்க்கப்படும் இந்த R என்பது என்பது Rex என்ற லத்தீன் மொழியில் மன்னர் என்பதை குறிக்கும்.
PA/Royal Mint
இரண்டாம் எலிசபெத் மகாராணியாக இருந்த போது அவரது கையெழுத்துக்கு பின்னால் R என்ற எழுத்து இடம் பெற்று இருந்தது.
மகாராணியின் கையெழுத்துக்கு பின்னால் இடம்பெறும் R என்பது Regina என்ற லத்தீன் மொழியில் ராணி என்பதை குறிக்கும்.
பிரித்தானிய தேசிய கீதத்தில் மாற்றம்:
ராணி இரண்டாம் எலிசபெத் மறைவை தொடர்ந்து இளவரசர் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்க உள்ளதால், பிரித்தானிய தேசிய கீதம் God Save the Queen என்பதில் இருந்து God Save the King என மாற்றமடையும்.
நாணயங்கள்:
பிரித்தானிய மகாராணி உயிரிழந்ததை தொடர்ந்து, புதிய மன்னராக பொறுப்பேற்க உள்ள மன்னர் மூன்றாம் சார்லஸ் உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட புதிய நாணயங்கள் வெளியிடப்படும்.
AP
ராணி இரண்டாம் எலிசபெத்தின் உருவப்படம் பொறிக்கப்பட்ட நாணயங்களில் அவரது உருவப்படம் வலது புறம் நோக்கி வடிவமைக்கப்பட்டு இருக்கும் நிலையில், புதிய மன்னருக்காக உருவாக்கப்படும் நாணயங்களில் மன்னர் மூன்றாம் சார்லஸின் உருவப்படம் அதற்கு எதிர் திசையில் இடது புறம் நோக்கி வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
ராணியாரின் புகைப்படத்துடன் கூடிய பணத்தாள்கள் புதிய அறிவிப்பு வெளியாகும் வரையில் செல்லுபடியாகும் என இங்கிலாந்து வங்கி தெரிவித்துள்ளது.
புதிய கொடி:
1960 ஆண்டு பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் தனக்கான தனிப்பட்ட கொடியை ஏற்றுக்கொண்டார்.
அவற்றை ராணி தங்கியிருக்கும் கட்டிடங்கள், பயணம் செய்யும் கப்பல், கார், விமானம் போன்றவற்றில் பறக்கவிடப்பட்டு இருக்கும்.
இதனைப்போலவே பிரித்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ்ஸுக்கு தனித்துவமான கொடி ஒன்று வடிவமைக்கப்படும்.
Getty
பாரிஸ்டர்கள்:
பிரித்தானியாவில், குயின்ஸ் ஆலோசகர் (QC) என்பது சட்டத்தில் கற்றுக்கொண்ட ஹெர் மெஜஸ்டிக் ஆலோசகரின் ஒரு பகுதியாக இருக்க மன்னர் நியமிக்கும் பாரிஸ்டர்கள் மற்றும் வழக்குரைஞர்களின் தொகுப்பைக் குறிக்கிறது.
பிரித்தானிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்க இருப்பதால் அவை தற்போது கிங்ஸ் கவுன்சில் (KC) என மாற்றடைய உள்ளது.